மேலும் அறிய

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

ஏற்கனவே பல பேருக்கு மஞ்ச நோட்டீஸ் கொடுத்து பிரச்சினையை முடித்ததுபோல் உங்களுக்கும் மஞ்ச நோட்டீஸ் கொடுத்து முடித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனைகள் தருவதாக கூறி மோசடி

விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி நகர் என்ற பெயரில் மனைப்பிரிவுகள் அமைத்து அதில் மாதம் ரூ.1,600 வீதம் 60 மாதங்கள் பணம் கட்டினால் அதற்குரிய மனைப் பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்றனர்.

அதேபோல் கடந்த 2016-ல் விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ரோஜா நகர் என்னும் மனைப்பிரிவுகளை அமைத்தும், அதில் மாதம் ரூ.1,200 வீதம் 55 மாதங்கள் பணம் கட்டினால் அதற்குரிய மனைப்பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ஷாகுல்அமீது, ரூ.1,200 வீதம் 15 மாதங்கள்  நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோரிடமும், அவர்கள் இல்லாத நேரத்தில் அசாருதீன், ஷாஜி ஆகியோரிடமும் மாதாந்திர தவணை தொகையை மொத்தம் ரூ.18 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

இவரைப் போன்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் 180 பேர்களிடமிருந்து ரூ.1½ கோடி வரை வசூல் செய்து அதற்குரிய மனைப்பிரிவுகளையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் 4 பேரும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதனிடையே சாதிக்பாஷா அவரது மனைவி பெயரில் ரூ.45 லட்சமும், நத்தர்பாஷா அவரது மகனுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான காரையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

மஞ்ச நோட்டீஸ் கொடுத்து முடித்துவிடுவேன்

இதையறிந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள், சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேரிடமும் சென்று வீட்டுமனைப்பிரிவுக்காக தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு பணம் தர முடியாது என்றும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஏற்கனவே பல பேருக்கு மஞ்ச நோட்டீஸ் கொடுத்து பிரச்சினையை முடித்ததுபோல் உங்களுக்கும் மஞ்ச நோட்டீஸ் கொடுத்து முடித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஷாகுல்அமீது உள்ளிட்டோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தர்பாஷா, சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு மே மாதம் சாதிக்பாஷாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய நபரான நத்தர்பாஷாவை (50) நேற்று மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget