காவலரை கன்னத்தில் அறைந்த மூதாட்டி...விழுப்புரத்தில் நடந்தது என்ன..?
மேல்மலையனூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற காவலரை கன்னத்தில் அறைந்த மூதாட்டியால் பரபரப்பு.
விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற காவலரை கன்னத்தில் அறைந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த செக்கடிகுப்பம் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற அதே கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் அலெக்ஸாண்டர் தலைமையில் நேற்று அவலூர்பேட்டை போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்பொழுது வீட்டின் உரிமையாளரான மூதாட்டி போலீசாரை திடீரென எழுந்து கன்னத்தில் அறைந்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
வீடு இடிக்கப்படுவதற்கு வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் மூதாட்டியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வேறு இடத்திற்கு செல்ல எழுப்பிய போது மூதாட்டி திடீரென பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்