மேலும் அறிய

கழிவுகளிலிருந்து ‘பயோ கேஸ்’....விழுப்புரத்தில் அசத்தும் பட்டதாரி இளைஞர்...!

விழுப்புரம் அருகே கழிவுகளிலிருந்து பயோ கேஸ் உற்பத்தி செய்து அசத்தும் பட்டதாரி இளைஞர்.

பயோகாஸ் (Bio Gas) என்பது கரிம கழிவுகளின் சிதைவிலிருந்து இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை உயிரி எரிபொருள் ஆகும். உணவுக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில்லா சூழலில் (ஆக்சிஜன் இல்லாத சூழல்) உடைக்கும்போது அவை வாயுக்களின் கலவையை வெளியிடுகின்றன. அதில் முதன்மையாக கிடைப்பது மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகும். நாட்டில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை தினசரி உயர்ந்து வருகிறது. இதுபோன்ற எரிவாயு விலை ஏற்றத்தால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கழிவுகளிலிருந்து  ‘பயோ கேஸ்’....விழுப்புரத்தில் அசத்தும் பட்டதாரி இளைஞர்...!

இதனை சமாளிப்பதற்காக, பல்வேறு பகுதிகளில் பயோகேஸ் தயாரிப்பு முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த நிவாஸ் (வயது 24) என்ற இளைஞர், சிறுவயது முதலே அறிவியல், விவசாயம், சமுதாய முன்னேற்றம் போன்ற பல வழிகளில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து, தனது கல்லூரி படிப்பை B.E.(EEE) முடித்தவுடன் தன் கிராமத்துக்கும் தன் குடும்பத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினார். அதன் முயற்சியால் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் எரிவாயு சிலிண்டர்  விலையை சமாளிப்பதற்காக பயோகேஸ் உற்பத்தி செய்யும் முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். முதலில் பல தோல்விகள் சந்தித்து, அதன்பின் வெற்றிகரமாக வீட்டிலேயே கிடைக்கக்கூடிய  சமையல் காய்கறி உள்ளிட்ட கழிவுகளில் இருந்து பயோ கேஸ் தயாரித்து வருகிறார்.

கழிவுகளிலிருந்து  ‘பயோ கேஸ்’....விழுப்புரத்தில் அசத்தும் பட்டதாரி இளைஞர்...!

இந்த முயற்சிக்கு 7,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். இவருக்கு உறுதுணையாக விருட்சம் என்ற தன்னார்வ குழுவினர் திகழ்ந்ததுடன் நண்பர்களின் உதவியுடன் தற்போது வெற்றிகரமாக காய்கறிகளில் இருந்து பயோகேஸ் தயாரித்து அதனை சமையலுக்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து நிவாஸ் கூறியதாவது:- பயோகேஸ் காய்கறி கழிவு, சாப்பாடு, மாட்டு சாணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பயோகேஸ் மூலம் காலையில் 20 நிமிடம் மாலை 20 நிமிடம் டீ, வெந்நீர் போன்றவை சமைக்க முடியும். என்னிடம் உள்ள காய்கறிகள் கழிவுகளை கொண்டு நான் தற்போது சிறிய அளவில் இதனை கண்டு பிடித்துள்ளேன்.

பயோ கேஸ் எப்படி உருவாகும் என்றால், முதலில் கழிவுகளை கொட்டுவதற்கு தேவையான பேரல், காய்கறி கழிவுகள், கேஸ் அமைக்க தேவையான ட்யூப். பேரலில் தேவையான காய்கறிகளை கழிவுகளை கொட்டவேண்டும். அவை சிதைய ஆரம்பிக்கும். அதன் கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை மரம் செடிகளுக்கு தெளிக்கும் திரவமாக பயன்படுத்தலாம். காய்கறிகளில் இருந்து பயோ கேஸ் உருவாவதற்கு ஒரு வாரமாகும். அதன்பின் அந்த பேரலலில் இருந்து ஒரு இணைப்பு டியூபில் கொடுக்க வேண்டும். டியூப்பிலிருந்து சமையலில் அடுப்பிற்கு இணைப்பு தரவேண்டும். அதன்பின் சமையல் அடுப்பு எரிய தொடங்க ஆரம்பிக்கும்.

கழிவுகளிலிருந்து  ‘பயோ கேஸ்’....விழுப்புரத்தில் அசத்தும் பட்டதாரி இளைஞர்...!

இந்த பயோகேஸ் மூலம் என்னுடைய தேவையை நான் பூர்த்தி செய்து கொள்கிறேன். இந்த சிறிய முயற்சியை நான் பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு நகராட்சி, மாவட்ட நிர்வாகம் எனக்கு உதவி புரிந்தால் ஒரு கிராமத்திற்கு என்னால் பயோகேஸ் தயாரித்துக் கொடுக்கும் அளவிற்கு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பயோ கேஸ் தயாரிக்கிறேன் என்று தெரிந்தவுடன் நகராட்சி அதிகாரிகள் வந்து பார்த்து, வாழ்த்து தெரிவித்தனர். எனக்கு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரே ஒரு கோரிக்கை தான். இந்த பயோ கேஸ் தயாரிப்பு முறையை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு தேவையான இடவசதி, காய்கறி கழிவுகளை தந்தால் நிச்சயமாக ஒரு குடும்பத்திற்கு தேவையான 5 கிலோ எரிவாயு என்னால் தரமுடியும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் நிவாஸ். விழுப்புரத்தில் பயோ கேஸ் தயாரிப்பு தற்போது சிறப்பு பெற்று வருகிறது.

மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
Embed widget