மேலும் அறிய

TVK Maanadu: கம்பீரமாக நிற்கும் தலைவர்கள் ; எதிர்பார்க்காத டுவிஸ்ட் வைத்த விஜய்... மிரண்டு நிற்கும் அரசியல் கட்சியினர்

மாநாட்டின் மேடையின் அருகே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார், தமிழன்னை, சேரர், சோழர் பாண்டியர் மற்றும் விஜய் 50அடி கட்அவுட் வைக்கபட்டுள்ளது.

விழுப்புரம்: தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் மேடையின் இடது புறம் அருகே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் மற்றும் விஜய் இவர்களின் 50அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது, வலதுபுறம் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர் மற்றும் விஜய் இவர்களின் 50அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரும் தலைவர்கள் கட்அவுட் இடம்பெறும் முதல் மாநாடாக இந்த தமிழக வெற்றி கழக மாநாடு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.

700 சிசிடிவி கேமராக்கள்

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துள்ளனர் 

இந்த நிலையில் மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.

150-க்கும் மேற்பட்ட மருத்துவமுகாம் 

மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும்  மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்காக சென்னை வந்த வருண்குமார் ஐபிஎஸ்? சிபிசிஐடியின் டிஐஜி ஆக நியமனம் - திமுக போட்ட ஸ்கெட்ச்
விஜய்க்காக சென்னை வந்த வருண்குமார் ஐபிஎஸ்? சிபிசிஐடியின் டிஐஜி ஆக நியமனம் - திமுக போட்ட ஸ்கெட்ச்
Income Tax Bill 2025: வருமான வரியில் வரப்போகும் மாற்றம் என்ன? புது மசோதாவால் லாபமா? யாருக்கு நெருக்கடி?
Income Tax Bill 2025: வருமான வரியில் வரப்போகும் மாற்றம் என்ன? புது மசோதாவால் லாபமா? யாருக்கு நெருக்கடி?
TVK Vijay: ஸ்பீடு ஏத்து மாமே.. இந்த வேகம் பத்தாது விஜய் சார்.. தீவிர அரசியலை கொஞ்சம் தீவிரமா பண்ணுங்க!
TVK Vijay: ஸ்பீடு ஏத்து மாமே.. இந்த வேகம் பத்தாது விஜய் சார்.. தீவிர அரசியலை கொஞ்சம் தீவிரமா பண்ணுங்க!
Tamilnadu Roundu 12.08.2025: தாயுமானவன் திட்டம் தொடக்கம்.. தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள் பட்டியல்
Tamilnadu Roundu 12.08.2025: தாயுமானவன் திட்டம் தொடக்கம்.. தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள் பட்டியல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்காக சென்னை வந்த வருண்குமார் ஐபிஎஸ்? சிபிசிஐடியின் டிஐஜி ஆக நியமனம் - திமுக போட்ட ஸ்கெட்ச்
விஜய்க்காக சென்னை வந்த வருண்குமார் ஐபிஎஸ்? சிபிசிஐடியின் டிஐஜி ஆக நியமனம் - திமுக போட்ட ஸ்கெட்ச்
Income Tax Bill 2025: வருமான வரியில் வரப்போகும் மாற்றம் என்ன? புது மசோதாவால் லாபமா? யாருக்கு நெருக்கடி?
Income Tax Bill 2025: வருமான வரியில் வரப்போகும் மாற்றம் என்ன? புது மசோதாவால் லாபமா? யாருக்கு நெருக்கடி?
TVK Vijay: ஸ்பீடு ஏத்து மாமே.. இந்த வேகம் பத்தாது விஜய் சார்.. தீவிர அரசியலை கொஞ்சம் தீவிரமா பண்ணுங்க!
TVK Vijay: ஸ்பீடு ஏத்து மாமே.. இந்த வேகம் பத்தாது விஜய் சார்.. தீவிர அரசியலை கொஞ்சம் தீவிரமா பண்ணுங்க!
Tamilnadu Roundu 12.08.2025: தாயுமானவன் திட்டம் தொடக்கம்.. தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள் பட்டியல்
Tamilnadu Roundu 12.08.2025: தாயுமானவன் திட்டம் தொடக்கம்.. தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள் பட்டியல்
Asia Cup: ஆசிய கோப்பைக்காக அணியை கலைத்து போடும் பிசிசிஐ - பும்ரா இன்? கில்லுக்கு கல்தா? புதிய துணை கேப்டன்
Asia Cup: ஆசிய கோப்பைக்காக அணியை கலைத்து போடும் பிசிசிஐ - பும்ரா இன்? கில்லுக்கு கல்தா? புதிய துணை கேப்டன்
நாங்களும் தள்ளுபடி தருவோம்.. 13 வகை கார்களுக்கு ஆஃபர் தந்த டொயோட்டா - எவ்ளோ கம்மி?
நாங்களும் தள்ளுபடி தருவோம்.. 13 வகை கார்களுக்கு ஆஃபர் தந்த டொயோட்டா - எவ்ளோ கம்மி?
New 7 Seater Hybrid: புதுசா வரப்போகும் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி, எம்பிவிக்கள் - எந்தெந்த பிராண்டில் தெரியுமா?
New 7 Seater Hybrid: புதுசா வரப்போகும் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி, எம்பிவிக்கள் - எந்தெந்த பிராண்டில் தெரியுமா?
Krishna Jayanthi vs Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தியும், கோகுலாஷ்டமியும் ஒன்றா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Krishna Jayanthi vs Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தியும், கோகுலாஷ்டமியும் ஒன்றா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Embed widget