பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பாராட்டு தெரிவித்த வி.சி.க. எம்.பி..! ஏன் தெரியுமா...?
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து தமிழை தேடி பயணத்திற்கு வி.சி.க எம்.பி.க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழை தேடி பயணத்திற்கு வி.சி.க எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
"புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பல ஆய்வாளர்களை உருவாக காரணமாக இருந்தது. இதில் பெரிய பல பேராசிரியர்கள் பணியாற்றினார்கள். தற்போது பேராசிரியர், இயக்குநர் இல்லாமல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தமிழ் மீது பற்று கொண்டவர். தமிழுக்காக போராட்டக்களத்தில் இருந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில தமிழுக்காக இருந்த நிறுவனம் மூடப்பட்டது என்ற அவபெயர் வரக்கூடாது. எனவே புதுவை மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மீண்டும் புதுப்பிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதாசுக்கு வி.சி.க. எம்.பி. பாராட்டு:
தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் ஆளுநரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஆளுநர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர். அவரது தந்தையும் தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர். அவரது காலததில் இந்த நிறுவனம் மூடப்பட்டால் அவருக்கும் அது பெரும் அவபெயராக இருக்கும், எனவே அவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் "தமிழை தேடி" என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக யார் எதை செய்தாலும் அதை வரவேற்கிறோம். அவரது நோக்கம் நிறைவேற வாழ்த்துகிறோம் என எம்.பி. ரவிக்குமார் பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி என்ற பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.