மேலும் அறிய

TVK Maanadu: இது மாநாடு இல்ல... “வெற்றி கொள்கை திருவிழா”... விஜய் கட்சி மாநாட்டின் புதிய அப்டேட்

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.

500 சிசிடிவி கேமராக்கள்

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.

150-க்கும் மேற்பட்ட மருத்துவமுகம் 

மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும்  மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.

வெற்றி கொள்கை திருவிழா

மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்தில் தரை முழுவதுமாக பச்சை கலர் மேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொபைல் டாய்லெட் மற்றும் குடிநீர் டேங்க் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
Rinku Singh: அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
AQI Index :  சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
Rinku Singh: அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
AQI Index :  சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
முதல் குழந்தை பெத்துக்கிட்டா 5K.. இரண்டாவது குழந்தைக்கு 6K.. பெண்களுக்கு அள்ளி கொடுக்கும் பாஜக!
கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000.. பெண்கள்தான் டார்கெட்.. அள்ளி கொடுக்கும் பாஜக!
Special Train: சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான தகவல்!
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
Embed widget