மேலும் அறிய

Tvk maanadu: அய்யனாரப்பா மழை வரக்கூடாது... யாகம் செய்த கிராம மக்கள்

TVK maanadu: தவெக மாநாடு நடைபெறும் வரை மழை பெய்யக்கூடாது என அய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு யாக பூஜை.

விழுப்புரம்: தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக் கூடாது என கிராம மக்கள் யாகம் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.

500 சிசிடிவி கேமராக்கள்

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.

150-க்கும் மேற்பட்ட மருத்துவமுகாம் 

மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும்  மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.

வெற்றி கொள்கை திருவிழா

மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாடு நடைபெறும் இடத்தில் தரை முழுவதுமாக பச்சை கலர் மேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொபைல் டாய்லெட் மற்றும் குடிநீர் டேங்க் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அய்யனாரப்பன் கோவிலில் யாகம் 

வி சாலை கிராம மக்கள் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக் கூடாது எனவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேண்டும் என அய்யனாரப்பன் கோயிலில் யாகம் நடத்தினர். மேலும், தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்க வேண்டும் என சக்திவாய்ந்த அய்யனாரப்பன் அதனை நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு
Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi speech On wayanad : Govi Chezhian : ”அமைச்சராகியும் மரியாதை இல்ல” பதவியால் என்ன பிரயோஜனம்! புலம்பும் கோவி செழியன்?Mamallapuram : ‘’எங்க மேல தப்பு இல்ல! ஒரிஜினல் VIDEO பாருங்க’’ புலம்பும் பெண்கள்Priyanka Gandhi Wayanad  : ’’35 ஆண்டுகள் கட்சிக்காக..முதல்முறையாக எனக்காக !’’பிரியங்கா EMOTIONAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு
Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு
"போதையின் பாதையில் போகாதீங்க" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்.. வீடியோ
Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்
Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. நாளை, ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. நாளை, ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
வேலையில்லா இளைஞர்களுக்கு கிடைத்த ஆஃபர்.. இனி வேலையில்லை என்ற கவலை இல்லை.. செய்ய வேண்டியது என்ன ?
வேலையில்லா இளைஞர்களுக்கு கிடைத்த ஆஃபர்.. இனி வேலையில்லை என்ற கவலை இல்லை.. செய்ய வேண்டியது என்ன ?
Embed widget