மேலும் அறிய

இது தேசிய பிரச்சினை... அன்புமணி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் - திருமாவளவன்

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில பிரச்சனையாக பார்க்காமல் தேசிய பிரச்சனையாக பார்த்து பாமக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் - திருமாவளவன்

விழுப்புரம் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் ஏற்பட்டால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவே இதனை அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு கையாள வேண்டும்.,  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில பிரச்சனையாக பார்க்காமல் தேசிய பிரச்சனையாக பார்த்து பாமக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் பேட்டியளித்தார்.

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முகாம் செயலாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்:

 

வருகின்ற மே-31ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. தேசிய அளவில் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், வெறுப்பு அரசியலை தவிர்க்க வேண்டும் என்பதை முன்னுறுத்தி இந்த பேரணி நடைபெறவுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. மே 18ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும். 

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை பாதுகாக்காமல் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய சங் பரிவார் அமைப்புகள் இந்தியர்களிடையே மதத்தின் பெயரால் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். காஷ்மீரில் நடந்த பயங்கரவாதம் இனி தொடராமல் இருக்க வேண்டுமானால் இந்தியர்கள் அனைவரும் மதம் கடந்து, சாதி கடந்து சகோதரர்களாய் இணைய வேண்டும். காஷ்மீர் படுகொலைக்கு அரசின் தவறான கொள்கை முடிவுகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமையை ரத்து செய்ததும் மிக முக்கிய காரணங்களாகும். எனவே பாஜக அரசு சகோதரத்துவத்தை பாதுகாக்க, இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோர் நலன்களை பாதுகாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

ஆளுநர் அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளால் குழப்பங்கள் உருவாகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை ஏற்க ஆளுந்ற் மறுக்கிறார். இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத பல குளறுபடிகளை ஆட்சி நிர்வாகத்திற்கு எதிரான செயல்களை ஆளுநர் தொடர்ந்து செய்கிறார். அதனுடைய விளைவாகத்தான் துணைவேந்தர்கள் தன்னிச்சையாக புறக்கணிப்பு செய்துள்ளனர். ஆளுநரின் நிலைப்பாடு என்பது துணைவேந்தர்களுக்கு ஒரு தேவையற்ற நெருக்கடியை உருவாக்குகிறது. ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆளுநர் தன் பொறுப்பை மறந்து அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார். 

காஷ்மீர் பிரச்சனையை மத அடிப்படையில் பாஜக கையாள்கிறது. பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கான நாடு, இந்தியா இந்துக்களுக்கான நாடு என்கிற ஒரு விவாதத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் இது மிகவும் ஆபத்தான ஒரு அரசியல். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார். உலக அரங்கிலும் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்பு பாழாகும். இதனை அரசியல் ரீதியாக கையாள வேண்டும். 

 

சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்க ஏன் அன்புமணி தயங்குகிறார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. இது தேசிய அளவிலான பிரச்சனை. எல்லா மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு போன்ற நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இதனை தேசிய பிரச்சினையாக பார்க்காமல், மாநில பிரச்சனையாக பார்க்கிறார்கள். இந்திய ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாமக பேச வேண்டும். 

தலைப்பு செய்திகள்

பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget