மேலும் அறிய
Advertisement
பணம் எங்கு உள்ளதோ அங்குதான் கடலூர் ஆட்சியரும் செல்வார் - பாமக மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு
’’மக்கள் பிரச்சினைகளை கேட்க ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தயாராக இல்லை. இது வருத்தத்தை அளிக்கிறது. பா.ம.க. சார்பில் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’
கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரிஸ்வானா பர்வீன், மற்றும் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பினா் , அதற்கு தலைவர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர், இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கவுன்சிலரும் ஆன முத்துகிருஷ்ணன், இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியும், அவர் பங்கேற்கவில்லை. ஏனெனில் பணம் எங்கு உள்ளதோ அங்குதான் மாவட்ட ஆட்சியர் செல்வார், மக்கள் பிரச்சினைகளை கேட்க அவர் தயாராக இல்லை. இது வருத்தத்தை அளிக்கிறது. பா.ம.க. சார்பில் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கூட்டத்தில் அவர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிரிக்குப்பம் ரெங்கநாதன்நகரில் மாநகராட்சி குப்பைகள் கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அறிகிறோம் இதை கைவிட வேண்டும். வேறு இடத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சாராயத்தை கூவி, கூவி விற்பனை செய்து வருகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தை விட இங்கு விலை குறைவாக கிடைக்கிறது. இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
உரக்கடைகளில் பொட்டாஷ் விலை 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1040 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று அமைச்சர் கூறியும், விலை குறையவில்லை. கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என பாமக வை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் அவர்கள் பேசினார். வேப்பூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்கவில்லை. எனவே முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுகவை சேர்ந்த சக்திவிநாயகம் எழுப்பிய கேள்விக்கு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அதிகாரிகள் கணக்கெடுத்து.பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்கள் என பதில் கூறினார்.
சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கட்டிடத்தை இடித்தால், இட நெருக்கடி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை தீர்க்க, அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும், பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு தேவை. கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் எனவும் பள்ளி கட்டிடங்களை குறித்து பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பட்டன அதற்கு தலைவர் திருமாறன் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும் என உறுதியளித்தார். இவ்வாறு பிளதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்றன, கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion