மேலும் அறிய

கடலூரில் தொடர் கனமழையால் பள்ளிக்கட்டடம் இடிந்து சேதம்

''இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முறையாக கட்டபடாமல் வெறும் மண்ணால் கட்டியது தான் இவ்வாறு இடிந்து விழ காரணம் என வானதிராயபுரம் கிராம மக்கள் புகார்''

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்ததால் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வந்தது.  இந்நிலையில் தெற்கு, கிழக்கு வங்க கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயல் சின்னமாக மாறியது.


கடலூரில் தொடர் கனமழையால் பள்ளிக்கட்டடம் இடிந்து சேதம்

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை தெற்கு ஆந்திரா, நெல்லூர், ஓங்கோல் வரை கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.


கடலூரில் தொடர் கனமழையால் பள்ளிக்கட்டடம் இடிந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. நேற்றும் மழை நீடித்தது. இந்த மழை பலத்த காற்றுடன் விடாமல் பெய்தது. மதியம் 2 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, தொழுதூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வடலூர் அருகே வானதிராயபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பள்ளி வகுப்பறை கட்டிடம்  திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.


கடலூரில் தொடர் கனமழையால் பள்ளிக்கட்டடம் இடிந்து சேதம்

பள்ளிக்கட்டிடம் அதிகாலையிலேயே இடிந்து விழுந்ததாலும், நேற்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததாலும் அந்த பள்ளியில் படித்து வந்த 32 பிஞ்சு குழந்தைகள் பெரும் விபத்தில் இருந்து தப்பித்தனர்.  மேலும் 2009-2010 ல் கட்டப்பட்ட இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முறையாக கட்டபடாமல் வெறும் மண்ணால் கட்டியது தான் இவ்வாறு இடிந்து விழ காரணம் என வானதிராயபுரம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன்  சம்பவ இடத்துக்கு சென்று இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்த மக்களிடம், புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget