கள்ளக்குறிச்சியில் கூகுள் பே மூலம் சாராயம் விற்பனை! 2லி வாங்கினால் அரை லிட்டர் இலவச ஆஃபர்!
கள்ளக்குறிச்சியில் கூகுள் பே மூலம் சாராயம் விற்பனை 2 லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் - காவல் துறை நடைவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த மலையில் உள்ள ஓடைகளில் வரும் மழைநீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி, அதனை கடலூர், சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளி்ட்ட பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கல்வராயன்மலை அடிவார பகுதியில் உள்ள சில கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதற்கு பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும் அவலமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏலம் எடுப்பவர்கள் கிராமப் புறங்களில் காய்கறிகளை விற்பனை செய்வது போல் சாராயத்தை வீதிவீதியாக சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடு்க்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சாராயம் விற்பனையை தடுக்கமுடியவில்லை.
இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த பிரம்மகுண்டம் கிராமத்தில் துரைசாமி என்பவரின் மகன் வெங்கடேசன் கள்ளச்சாரம் விற்பனை நடத்தி வருகிறார். இவர் மறைமுகமாக சட்டத்துக்கு புறம்பாகவும் கள்ளச்சாராயம் விற்பனையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வெங்கடேசன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூகுள் பே மூலம் இரண்டு லிட்டர் சாராயம் வாங்குபவர்களுக்கு அரை லிட்டர் சாராயம் இலவசம் என தெரிவித்துள்ளார். இதனால் விற்பனையாளர் வெங்கடேசன் வீட்டில் சாராயம் வாங்க அதிக அளவிலான மது குடிப்போர் கூட்டம் அலைமோதி உள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவிய நிலையில் தற்போது காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு