விழுப்புரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 7 தொகுதி வாக்காளர் பட்டியல் முழு விவரம் இதோ!
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 8,34,394 ஆண் வாக்காளர்களும், 8,55,708 பெண் வாக்காளர்களும், 213 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,90,315 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2024 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியின்கீழ், 07 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 8,34,394 ஆண் வாக்காளர்களும், 8,55,708 பெண் வாக்காளர்களும், 213 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,90,315 வாக்காளர்கள் உள்ளனர். 05.01.2023 முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி படிவம் 7-இன்படி, 23,038 ஆண்கள், 27,963 பெண்கள் மற்றும் 13 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 51,014 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 4,611 ஆண்கள், 5,912 பெண்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,531 வாக்காளர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தல் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 70. செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 304 வாக்குச்சாவடிகளில் 1,24,127 ஆண்களும், 1,27,420 பெண்களும், 33 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,51,580 வாக்காளர்களும், 71.மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 267 வாக்குச்சாவடிகளில் 1,04,976 ஆண்களும், 1,04,853 பெண்களும், 20 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,09,849 வாக்காளர்களும், 72.திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 267 வாக்குச்சாவடிகளில் 1,10,825 ஆண்களும், 1,14,235 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,25,075 வாக்காளர்களும், 73.வானூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 278 வாக்குச்சாவடிகளில் 1,10,053 ஆண்களும், 1,14,231 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,24,302 வாக்காளர்களும், 74.விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 289 வாக்குச்சாவடிகளில் 1,24,412 ஆண்களும், 1,30,137 பெண்களும், 63 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,54,612 வாக்காளர்களும், 75.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் 1,14,140 ஆண்களும், 1,16,396 பெண்களும், 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,30,564 வாக்காளர்களும்,
76.திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 286 வாக்குச்சாவடிகளில் 1,27,434 ஆண்களும், 1,26,385 பெண்களும், 31 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,53,850 வாக்காளர்கள் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,966 வாக்குச்சாவடிகளில் 8,15,967 ஆண்களும், 8,33,657 பெண்களும், 208 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,49,832 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குசாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. வாக்காளர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவுப் பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் https://www.nvsp.in/ மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரம் சரிபார்த்துக்கொள்ளலாம்.
திருத்துவது எப்படி?
2023 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளின் கீழ், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 27.10.2023 முதல் 09.12.2023 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் இணையதளம் https://www.nvsp.in/ மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் மீது 26.12.2023 அன்று முடிவு செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்படும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் : 1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 - வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பழனி காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.