மேலும் அறிய

‘ரஜினி கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா..?’ - கே.எஸ். அழகிரி

தமிழக ஆளுநரின் அனைத்து கருத்துக்களை நாங்கள் எதிர்ப்பதில்லை ஒரு சில கருத்துகளுக்கு மட்டுமே எதிர்கின்றோம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கேஸ் எஸ் அழகிரி

தமிழக ஆளுநரின் அனைத்து கருத்துக்களை நாங்கள் எதிர்ப்பதில்லை ஒரு சில கருத்துகளுக்கு மட்டுமே எதிர்ப்பதாகவும், ஆளுநரை சந்தித்தபின் அரசியல் பேசினோம் அதை கூற முடியாது என கூறும் ரஜினி "தான் கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா" என்பதை அவர் தான் சொல்ல வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75 வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் நடைபயணமாக நான்கு முனை சந்திப்பு வரை சென்றனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பொதுவுடமை, சோசிலியஸ்ட் கட்சிகள் சுதந்திர தினத்தை பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பாஜகவினர் மூன்றாவது முறையாக சுதந்திர தினவிழாவினை கொண்டாடுவதை வரவேற்பதாகவும், தேசிய கொடியை எந்த சொல்லும் பாஜகவினர் அதன் வரலாற்றை மறைப்பதாகவும், வரலாற்றை மறைப்பதன் மூலம் சுதந்திர வரலாற்றை மறைப்பது தெளிவாக விளங்குவதாக கூறினார்.

இடஒதுக்கீட்டிற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆதரவாக செயல்பட்டதில்லை எனவும், கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்ற தீண்டாமையை 100 ஆண்டுகளில் காங்கிரஸ் மாற்றியுள்ளதாகவும், அண்ணாமலை சனாதனத்தை திரிக்க பார்ப்பதாக கூறினார். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என  சீ வோட்டர்ஸ் கருத்து கணிப்பு வெளியிட்டது ஒரு கருத்து திணிப்பு என்றும் கருத்து கணிப்புகள் எவ்வளவோ தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், காவல்துறை அதிகாரிகள் தவறு செய்தால் சர்வதிகாரியாக மாறுவேன் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். கள்ளக்குறிச்சி கனியாமூர் வழக்கில் மாணவிக்கு அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் கலவரம் நடத்தி சிலர் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுத்தது. அதில் அண்ணாமலை குறை கூறுவதை ஏற்கமுடியாது எனவும் சனாதனத்தை அண்ணாமலை திரிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆளுநரின் அனைத்து கருத்துக்களை நாங்கள் எதிர்ப்பதில்லை ஒரு சில கருத்துகளுக்கு மட்டுமே எதிர்பதாக தெரிவித்தார். ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளரை சந்தித்த ரஜினி அரசியல் பற்றி ஆளுநருடம் பேசினோம் என்று கூறுகிறார். ஆனால் என்ன பேசினோம் என்பதை கூற தவிர்க்கும் அவர் இவ்விவகாரத்தில் கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என்பதை ரஜினி தான் பதில் கூற  சொல்ல வேண்டுமென தெரிவித்தார். காங்கிரசை பொறுத்தவரை நீட் என்பதை வேண்டாம் என்று தான் கூறுகிறோம். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நீட் தேர்வு நடத்தினால் நாங்கள் ஏற்போம் என்றும் கூறினார்.

Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

Crime : ஆன்லைன் ரம்மியில் தோற்று அவஸ்தை.. ஒன்றுகூடிய மக்கள்.. திருடனாக மாறிய கான்ஸ்டபிள்.. என்ன நடந்தது?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget