மேலும் அறிய
Advertisement
புரட்டாசி 4ஆவது சனிக்கிழமை - தளர்வுகள் அளிக்கப்பட்டும் பக்தர்கள் கூட்டம் இல்லாத திருவந்திபுரம் கோயில்
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய மக்களின் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது
உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் தினசரி பாதிப்பு குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும் கொரோணவின் மூன்றாம் அலை உருவாவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு கடந்த மாதம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்தது, அதில் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும், இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இடம் ஆகும். ஆனால் இந்த கொரோனா காலகட்டம் தொடங்கிய முதல் இங்கு பெரிதும் திருமணங்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திருமணத்திற்காக வேண்டி கொண்டவர்கள் மற்றும் முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மட்டும் இங்கே திருமணம் செய்து கொண்டு வந்தனர். இக்கோயிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நடைபெறுவதால், கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
இந்தநிலையில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் அச்சம் உள்ளதால் தமிழக அரசு வாரம் மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமை அன்று கோயிலில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாட்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததை அடுத்து மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
ஆனால் தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டு உள்ள உத்தரவில் பல தரப்பு மக்களின் கோரிக்கையினை ஏற்று கோயில்களில் வாரத்தின் 7 நாட்களும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளித்து உள்ளது, அதனால் இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய மக்களின் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தேவநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. மேலும் மொட்டை அடிப்பதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால் அதனை குறைக்க கோயிலுக்கு வெளியே சாலையின் உள்ள மைதானத்தில் கூடாரம் அமைக்கப்பட்டு அங்கே பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion