புதுவையில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவ.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு- ஆளுநர் தமிழிசை பேட்டி
’’புதுச்சேரியில் ஏறக்குறைய 90 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர்’’
புதுச்சேரியில் நவம்பர் முதல் வாரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், 90 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் இலவச சிறப்பு தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக சுகாதார துறை அதிகாரிகளை அழைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, நாங்க போட்டு கொண்டோம் - நீங்க போட்டுக் கொண்டீர்களா என்ற கொரோனா விழிப்புணர்வு காணொளியையும் அவர் வெளியிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
கூட்டத்தில் பேசிய துணை நிலை ஆளுநர், புதுச்சேரியில் தடுப்பூசி போட்டு கொண்டோர் சதவீதம் 75 இல் இருந்து தாண்டி 80ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 25 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் புதுச்சேரி முழுவதும் நடத்தப்பட இருக்கிறது. ஏறக்குறைய ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று செய்து வருகிறோம். சில இடங்களில் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சீனா போன்ற நாடுகளில் நோய் தொற்று அதிகரித்திருக்கிறது. கொரோனா தற்போது பெருந்தொற்று நிலையிலிருந்து நிரந்தரமான ஊர்த் தொற்றாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் கருத்து கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் ஏறக்குறைய 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 2 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் முடித்துள்ளது. அதற்கான அனுமதி பெற முயற்சி நடைபெற்று வருகிறது. இது மிக பெரிய சாதனை. கொரோனா சொட்டு மருந்தும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது அறிமுகப் படுத்தப்பட்டால் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும். குழந்தைகள் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை அளவு குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்