மேலும் அறிய

புதுச்சேரி: தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாவாசிகள்!

'புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதால் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது'

புதுச்சேரி அரசின் வேளாண் துறையின் சார்பில் தாவரவியல் பூங்காவில் கடந்த 1978 முதல் ஆண்டு தோறும் மலர், காய் மற்றும் கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்படவில்லை. கடந்தாண்டு மட்டும் இக்கண்காட்சிக்கு பதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலதுறையின் மலர் உற்பத்தி, காய்கறிச் சாகுபடி தொழில் நுட்பங்கள் சிறிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தாண்டு மலர் கண்காட்சியை மனதில் கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 1.15 லட்சம் ரூபாய் செலவில் மலர் கண்காட்சிக்காக செடிகள் உற்பத்தி செய்யப்பட்டன. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். மலர் கண்காட்சிக்கு 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிதி நெருக்கடியில் உள்ள புதுச்சேரி அரசு மலர் கண்காட்சி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

புதுச்சேரி:  தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாவாசிகள்!

அதேபோல், கொரோனா நோய் தொற்று காரணமாக கண்காட்சி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட மலர் செடிகள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள மலர்செடிகள் மையத்தில் உருவாக்கப்பட்ட பூத்து குலுங்கும் மலர் செடிகளை தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தும் பணியை தோட்டக்கலை பிரிவு மேற்கொண்டது. இதன் காரணமாக தாவரவியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. வண்ணமயமாக பூத்து குலுங்கும் மலர்களின் அருகே செல்பி எடுத்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி:  தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாவாசிகள்!

புதுச்சேரியின் சுற்றுலா பகுதிகளில் தாவரவியல் பூங்காவும் ஒன்று. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா என்ற பெருமையுண்டு. புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா பிரெஞ்சு காரர்களால் அமைக்கப்பட்ட பாரம்பரிய பூங்காவாகும். 1826ம் ஆண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டது. 1838ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் பெரோட் இப்பூங்காவின் பொறுப்பு ஏற்றார். அவரது முயற்சியால் கடற்கரை காற்றால் பாதிக்காத தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

புதுச்சேரி:  தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாவாசிகள்!

புதுச்சேரியில் உள்ள பசுமை மாறா உலர் வெப்பமண்டல காடுகளின் தாவரங்கள் மட்டுமின்றி சுமார் 200 கிமீ தொலைவு சுற்று வட்டாரத்தில் எங்குமே காண முடியாத பல அரிய வகை மரங்களும் இப்பூங்காவில் உள்ளன.  22 ஏக்கரில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் கல்மரம், சிறுவர் விளையாட்டு பகுதி, சிறுவர் ரயில்,மீன் அருங்காட்சியகம் என பல முக்கிய அம்சங்களும் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?

Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

சென்னை : 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண் - ஊரை விட்டு ஓட முயன்றபோது சிக்கியது எப்படி?

மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!

Siragadikka Aasai Serial July 16 : பயத்தில் உதறும் விஜயா மனோஜ்... பார்வதி கொடுத்த ஐடியா என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று

Embed widget