மேலும் அறிய
Advertisement
பிரதமரும், ஆளுநரும் மத வெறியை தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள் - அமைச்சர் பொன்முடி
பாராளுமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென பிரதமர் கூறட்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம்: மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆளுநருக்கும் பிரதமருக்கும் இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா வீதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை மற்றும் ரூ.45.96 லட்சம் மதிப்பீட்டில கட்டப்பட்ட புதிய பூங்காவினை உயர்கல்வி துறைதுறை அமைச்சர் பொன்முடி, திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து காட்டுமன்னார் கோவில் அருகேயுள்ள அதனூர் கிராமத்தில் 100 பட்டியலினத்தவருக்கு பூ நூல் அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பதாக தெரிவித்தற்கு பதிலளித்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி பிராமணர்கள் இருப்பவர்கள் மட்டுமே பஞ்சு நூலில் பூனுல் அணிய வேண்டும் என்ற காலம் இருந்தது.
அதனை எல்லாம் மாற்றி அனைத்து சாதியினரும் மட்டுமல்ல ஏழு மகளிரும் அர்ச்சகராகலாம் என கூறியது தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் ஜாதி வேறுபாடு தமிழ்நாட்டில் இருக்கிறது என்று கூறும் ஆளுநர் பீகார் மாநிலத்திற்கு சென்று ஜாதிய வேறுபாடு குறித்து பேச வேண்டும். நந்தனார் வழியில் தான் எல்லோரும் அர்ச்சகராக ஆகலாம் என திமுக ஆட்சியில் கூறப்பட்டு வருகிறது. நீதிகட்சி காலத்திலிருந்து இந்து கோவில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற நிலை தமிழகத்தில் இருந்து வருவதாகவும், பிரதமர் அதனை தெரிந்துகிட்டு பேச வேண்டும் திருவள்ளுவருக்கே பூனுல் போட்ட காலமுண்டு என கூறினார். எத புகுத்த வேண்டும் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் எண்ணம் ஆளுநருக்கும் பிரதமருக்கும் இல்லை. பாராளுமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென பிரதமர் கூறட்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion