மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
புதுச்சேரியில் குரும்பாபேட் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி குரும்பாபேட் துணை மின்நிலையத்தில் வருடாந்திர உபகரணங்கள் அளவு திருத்த பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (22.10.2024) நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்னழுத்தம் செய்யப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :-
குரும்பாபேட் தொழிற்பேட்டை பகுதி, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவென்யூ, அமைதி நகர், கோபாலன் கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், முத்திரையர்பாளையம், வழுதாவூர் சாலை (மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து குரும்பாபேட் சாலை வரை), உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மூலக்குளம் மின்பாதை :-
மூலக்குளம் மின்பாதையில் மாணிக்க செட்டியார் நகர், வி.எம்.தோட்டம், ராம் நகர், வி.பி.சிங் நகர் (ஒரு பகுதி), மேட்டுபாளையம், சண்முகாபுரம், பாரதிபுரம், தட்சிணாமூர்த்தி நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம் (ஒரு பகுதி), திலாசுபேட்டை (ஒரு பகுதி), காந்தி நகர் (ஒரு பகுதி), கனகன் ஏரி ரோடு, கவுண்டம்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம் (ஒரு பகுதி), வீமன் நகர், மணக்குளவிநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், மூலக்குளம் (ஒரு பகுதி), குண்டுசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
புதிய ஜிப்மர் மின் பாதை பகுதிகள்:-
புதிய ஜிப்மர் மின்பாதையில் கோரிமேடு காவலர் குடியிருப்பு (ஒரு பகுதி), அரசு செயலாளர் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை குடியிருப்பு, கோரிமேடு நகராட்சி வணிக வளாகம், மதர்தெரசா நர்சிங் கல்லூரி, தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
வில்லியனூர்- மரப்பாலம் மின் பாதை பகுதிகள்:-
வில்லியனூர் - மரப்பாலம் மின் பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், வயல்வெளி, அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், தியாகுபிள்ளை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் நிறுத்தம் செய்யப்படும் நாளில் அன்றைய தினம் மழை பெய்தால் மின் நிறுத்தம் மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் நிறுத்தம் செய்யும் பெறும் பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை காலை 9 மணிக்கு முன்னரே தயார் செய்து கொள்ளவும். மேலும் மொபைல் ஃபோன் டார்ச் லைட் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சார்ஜ் செய்ய வேண்டுமானால் 9 மணிக்கு முன்னதாகவே சாட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மின்னிறுத்தம் 9 மணிக்கு தொடங்கி 2 மணி வரை நடைபெறும் பணியின் காரணமாக நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் எனவும் மின்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே புதுச்சேரி மக்கள் இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.