மேலும் அறிய

சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளு அளவிற்கு கூட தகுதி இல்லை - அன்புமணி ராமதாஸ்

தேர்தல் வந்தால் திமுக எப்போதுமே வன்னியர்களை வைத்து பாமகவை இழிவாக பேசுவார்கள் - அன்புமணி

விழுப்புரம்: சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளு அளவிற்கு கூட தகுதி இல்லை என்றும் தேர்தல் வந்தால் திமுக எப்போதுமே வன்னியர்களை வைத்து பாமகவை இழிவாக பேசுவார்கள் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் 21 ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக திமுக நாம்தமிழர் கட்சி என முக்கிய மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து சுயேட்சை வேட்பாளர்கள் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு தாக்கல் நான்காவது நாளான இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பாமக வேட்பாளர் அன்புமணி என மொத்தமாக 15 பேர் மனு தாக்கல் செய்தனர்.

முக்கிய கட்சிகளான திமுக வேட்பாளர் காலை மனு தாக்கல் செய்த நிலையில் பாமக வேட்பாளர் அன்புமனி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே.மணி உடன் மனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்லில் பாமக வேட்பாளர் அன்புமணி வேட்பு மனு தாக்கலுக்கு செய்த பிறகு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் பாமக வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் பணத்தை மட்டும் நம்பியிருக்கிற திமுகவிற்கு பட்டாளி மக்களை நம்பியிருக்கிற பாமகவிற்கு தான் போட்டி என தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் பாமக பலமாக உள்ளதாகவும், விக்கிரவாண்டியில் எங்கள் கூட்டணி பலமாக உள்ளதாகவும், விக்கிரவாண்டி தொகுதியில் சர்க்கரை ஆலை மட்டுமே ஒன்று உள்ளதாகவும் வேறு ஏதேனும் தொழிற்சாலை கிடையாது என்றும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் அமைச்சர்கள் மற்ற நேரத்தில் எங்கே போனீர்கள் என கேள்வி எழுப்பினார்.

குடிசைகள் உள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை சமூக நீதி அடிப்படையில் இடைத்தேர்தலை சந்திக்கிறோம் மக்கள் தெளிவாக இருப்பதாகவும், சாதி மதம் இனம் பிரச்சனையை தூண்டலாம் என ஆளும் கட்சியினர் உள்ளனர். சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளூ அளவிற்கு கூட தகுதி இல்லை என்றும் கலைஞர் கருனாநிதி உள்ள திமுக வேறு ஸ்டாலின் இருக்கிற திமுக வேறு என கூறினார். 

சமூக நீதிக்கும் பொன்முடி ஏவ வேலு, நேருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் பணம் கொடுத்து வாக்கு பெற்றுவிடலாம் என திமுகவினர் நினைப்பதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக இடஒதுக்கீடு கொடுப்பதாக ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாகவும், தேர்தல் வந்தால் திமுக எப்போதுமே பாமகவை வன்னியர்களை வைத்து இழிவாக பேசுவார்கள் என தெரிவித்தார்.

விளம்பர அரசியலை திமுக செய்து வருகிறது என்றும் தியாகிகள் குடும்பத்திற்கு கொடுக்கிற 3 ஆயிரம் கொடுப்பது மணி மண்டபம் கட்டுவோம் என்பது எந்த பிரயோஜனம் இல்லை என்றும் கூட்டணிக்கு சென்றால் திமுக மாதிரி எங்களது நிலைபாட்டினை மாற்றி கொள்ள மாட்டோம் என்றும் நீட் தேர்வு வேண்டாம் என்றும் தான் கூறுவதாகவும், கள்ளச்சாராய உயிரிழப்பினை விட டாஸ்மாக் விற்பனையால் உயிரிழப்பு அதிகம் தமிழகம் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget