மேலும் அறிய
விழுப்புரத்தில் பரபரப்பு; மீண்டும் பெரியாரை சீண்டிய சீமான்... என்ன பேசினார் தெரியுமா ?
பெரியார் மட்டும் வரவில்லை என்றால் நான் விவசாயம் பார்த்திருப்பேன் என்கிறார்கள் ஆனால் அவர் வராமல் இருந்தாலே இன்றைக்கு அனைவரும் விவசாயம் செய்திருப்பார்கள் - சீமான்

சீமான்
Source : ABP NADU
விழுப்புரம்: பெரியார் மட்டும் வரவில்லை என்றால் நான் விவசாயம் பார்த்திருப்பேன் என்கிறார்கள், ஆனால் அவர் வராமல் இருந்தாலே இன்றைக்கு அனைவரும் விவசாயம் செய்திருப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள நரசிங்கனூரில் பனைகனவு திருவிழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கள் விடுதலை இயக்கம் நல்லுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பனை கனவு திருவிழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், பனையேறிகளின் கனவு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது பனையை அர்ப்பமாக பார்க்கிற நிகழ்வு தமிழகத்தில் தான் உள்ளது.
ஆட்சியாளர்கள் பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சமாட்டோம் என தெரிவிக்கிறார்கள் ஆனால் நாங்கள் தானே பனையே என கூறினார். தமிழ் ஈழம் என்பது இரண்டு மாவட்ட அளவு தான் பனையும் இறாலும் போது தலைசிறந்த நாடாகா மாற்றுவேன் என பிரபாகரன் தெரிவிந்திருந்தார். வேளாண்மை என்பது தொழில் அல்ல அது நம்முடைய பண்பாடு வாழ்வியல் நெசவும் உழவும் மனிதனுக்கு உயிருக்கு மேல் இந்த நாட்டில் நெசவுக்கும் வேளாண்மைக்கும் மதிப்பில்லை பனை என்பது வேளாண்மையோடு இனைந்த ஒன்று, தன்னிடத்தில் உள்ளது பிறரிடத்தில் உள்ளது என்று நினைக்கும் இழிவு நிலை நம்மிடத்தில் உள்ளது.
இன்னும் குடும்ப அட்டைகளில் கால்நடைகளின் பெயர்களும், புகைப்படங்களில் இடம்பெற்றிருப்பதாக சீமான் தெரிவித்தார். கால்வாயில் இருகரையிலும் சிமெண்ட் பூசிவிடுகிறார்கள் இதனால் எந்த பயனும் இல்லை நூல்விலையும் மின்கட்டனைத்தினையும் உயர்த்தி விட்டால் எப்படி நெசவு தொழில் செய்ய முடியும் வேளாண்மையில் விளைவித்தவர்கள் விலையை தீர்மாணிக்க முடியல, உயிரியியல் போர் தொடுத்து அழித்ததில் பனையும் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. அன்றெல்லாம் சர்க்கைவியாதி எங்கையாவது இருக்கும் இன்று நிறைய பேருக்கு உள்ளது. பரம்பரை நோயாக கடத்தப்பட்டுள்ளது.
கருப்பட்டி ஒழிக்கபட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஒத்த மரத்து கள்ளை பருகினால் சீமானும் வெள்ளைக்காரன் மாதிரி ஆகிடுவேன். என் சகோதரனும் நானும் சேர்ந்து 13 மரத்து கள்ளை பருகிய காலமுண்டு போதையின் பாதையில் செல்லாதீர்கள் என உங்க அப்பா சொல்லுகிறேன் என ஒருவர் கூறி கொண்டு இருக்கிறார். இந்தியாவிலுள்ள மாநிலங்களை ஆளும் முதல்வர்களுக்கு டாஸ்மாக் ஆலைகள் இருக்கிறதா என்று கேட்டால் தமிழகத்தில் உண்டு பினாமி பெயரில் இருக்கும் இலங்கையிலிருந்து யாழ்பாணத்திலிருந்து பனை விதைகளை கொண்டு வந்து நடவு செய்ததாகவும், தீவிரவாதிகள் சுட விட்டவர்கள் மூக்குத்தியில் பிட் எடுத்து செல்கிறார்களா என மாணவர்களை சோதனை செய்கிறார்கள்.
தேர்தல் அரசியல் கட்சி அரசியல் தான் இங்கு உள்ளது. பெரியார் மட்டும் வரவில்லை என்றால் நான் விவசாயம் பார்த்திருப்பேன் என்கிறார்கள் அவர் வராமல் இருந்தால் இன்றைக்கு அனைவரும் விவசாயம் செய்திருப்பார்கள் துன்பத்தை கொடுக்கும் நபருக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பார்கள் துண்டு போட்டு போட்டு துண்டாக்கி விட்டார்கள், நாம் தமிழர் கட்சியே அடுத்து கள் இறக்கும் போராட்டைத்தை முன்னெடுக்கும் நானே பனைமரம் ஏறி கள் இறக்குவேன் விவசாயிகளுக்கு பயன் தரும் எந்த திட்டமும் அரசு கொண்டுவருவதில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















