விழுப்புரத்தில் பரபரப்பு .... காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்
சென்னையில் அமலாக்கத்துறையினர் உயர் கல்வித்துறை அமைச்சரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் காவல் நிலையங்களில் நிறுத்தம்.
விழுப்புரம்: சென்னையில் அமலாக்கத்துறையினர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், விழுப்புரம் மாவட்டங்களில் கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் காவல் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழக உயர் கல்விதுறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லம் கெளதமசிகாமணி சொந்தமான விக்கிரவாண்டியிலுள்ள சூரியா பொறியியல் கல்லூரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கயல் பொன்னி ஏஜென்சி ஆகிய மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்க துறையினர் அமைச்சர் பொன்முடி இல்லத்திலுள்ள அறைகளில் சோதனை மேற்கொண்ட பின்பு வீட்டின் வாயிலில் நிறுத்தபட்டிருந்த காரில் சோதனை செய்து இரு அறைகளிலும் வைக்கபட்டிருந்த இரண்டு பீரோக்களிலும் சோதனை செய்தனர். பீரோக்களை திறப்பதற்கான சாவி அமைச்சர் பொன்முடி மனைவியிடம் உள்ளதால் பூட்டினை திறக்கும் தொழிலாளியை அழைத்து வந்து மாற்று போட்டு பிரோக்களை திறந்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனையானது 14 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்து கொண்டு இரவு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் கயல் பொன்னி ஏஜென்சி சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து சோதனையை முடித்து கொண்டு அமலாக்க துறையினர் புறப்பட்டு சென்றனர். அமலாக்க துறையினர் 17 மணி நேர சோதனை மூன்று இடங்களில் நிறைவு செய்தனர். அமலாக்க துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி இல்லத்தில் இரு பீரோக்களில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் கயல் பொன்னி ஏஜென்சி, சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். நள்ளிரவோடு அமலாக்க துறையினரின் சோதனைகள் நிறைபெற்றன.
சென்னையில் அமலாக்கத்துறையினர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், விழுப்புரம் மாவட்டங்களில் கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் காவல் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/