மேலும் அறிய

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள நாங்க ரெடியா இருக்கோம் - அமைச்சர் பொன்முடி உறுதி

மழை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ள அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தயார் நிலையில் இருக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்து ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, மழை முன்னெச்சரிக்கையாக மரக்காணத்தில் 12 பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள்  தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவ மழை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிகாரிகளும், திமுக நிர்வாகிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக கனமழையின் போது விழுப்புரம்  புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் மழை நீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற 100 குதிரை திறன் கொண்ட மின் மேட்டார் பொருத்தபட்டுள்ளதால் அதனை வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
 
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, மழை முன்னெச்சரிக்கையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருந்தால் 04146 223265 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மரக்காணம் பகுதிகளில் 12 பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதாகவும், மரக்காணம் பகுதிகளில் 122 தாழ்வான பகுதிகள் உள்ளதால் அவர்கள் மழைய பாதிப்பினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக வெளியேற்ற அனைத்து முன்னெச்சரிக்கையும்  செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
 
மழை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ள அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தயார் நிலையில் இருக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 17 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

நேற்று கோவை, மதுரையில் மிக கன மழை பெய்து பல இடங்களில் வெள்ளக் காடாக மாறின. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் இப்போது புதிதாக உருவாகியுள்ள தாழ்வு பகுதி காரணமாகவும் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை பெய்யும் என கூறப்படுகிறது.

4 நாட்களுக்கு அலெர்ட் ஆக இருங்க மக்களே

இன்று உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு, மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை இது நகரகூடும் என்றும் தெரிகிறது. இதனால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை

இதனால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.

மேலும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு எச்சரிக்கை

இதுதொடர்பாக தலைமைச் செயலக பொதுத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 14ஆம் தேதியான இன்று : விழுபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget