திமுகவுக்கு திடீர் புகழாரம் சூடும் பாமக எம்எல்ஏ... கை குலுக்கிய அமைச்சர் பொன்முடி - பின்னணி என்ன தெரியுமா?
முதல்வர் மற்றும் தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை பாராட்டி பேசிய பாமக எம்எல்ஏ சிவக்குமாரை வரவழைத்து கைகுலுக்கி பாராட்டிய அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் கரும்பு திருமண மண்டபத்தில், 71-வதுஅனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், அமைச்சர் பொன்முடி, 1663 மகளிர்சுயஉதவிக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.10,69,24,000/- மதிப்பீட்டில் மகளிர்சுயஉதவிக்குழு கடனுதவியும், 10 பயனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பீட்டில் கலைஞர் கனவுஇல்லம் கட்டுதற்கான கடனுதவியும், 5 பயனாளிகளுக்கு ரூ.22,50,000/- மதிப்பீட்டில் சிறுபால்பண்ணை கடனுதவியும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிட்டில்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.21,76,640/- மதப்பீட்டில் டிராக்டருக்கான கடனுதவியும், 2பயனாளிகளுக்கு ரூ.2,00,000/- மதிப்பீட்டில் போர்வெல் அமைப்பதற்கான கடனுதவியும், 2பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் சிறுவணிகக் கடனுதவியும், 68 பயனாளிகளுக்குரூ.32,30,000/- மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவியும், 42 பயனாளிகளுக்கு ரூ.11,56,000/-மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 813 பயனாளிகளுக்கு ரூ.6,50,38,900/-மதிப்பீட்டில் பயிர் கடனுதவியும், 4 பயனாளிகளுக்கு ரூ.12,00,000/- மதிப்பீட்டில் தனிநபர் ஜாமீன்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.8,90,000/- மதிப்பீட்டில் வீட்டுக்கடனுதவியும், 1 பயானிக்குரூ.5,00,000/- மதிப்பீட்டில் வீட்டு பராமரிப்பு கடனுதவி என மொத்தம் 2620 பயனாளிகளுக்குரூ.18,49,65,540/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாய பெருமக்கள் நலனில் அக்கறைகொண்டு அதிகப்படியான விவசாயம் நடைபெறும் பகுதிகளுக்கு அருகிலேயே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்துக்கொடுத்துவருகிறார்கள். இதன் மூலம், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடிகிறது. மேலும், விளைபொருட்களுக்கான உரிய விலையும் கிடைக்கப்பெற்று வருகிறார்கள். அந்த வகையில்,விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த துணை முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு,விவசாயிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வாயிலாக தாங்கள் விளைவித்தபொருட்களுக்கு முறையாக பணம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்கள்.
விழுப்புரத்தில் ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது
முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 20918 நபர்களுக்கு ரூ.89.88 கோடிமதிப்பிலான 5 பவுன் நகைக்கடனுதவிகளை தள்ளுபடி செய்துள்ளார்கள். மேலும், 24129 மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.24.43 கோடி மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழுகடனுதவிகள் தள்ளுபடி செய்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறைகள் மூலமாக 923 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 240 பகுதிநேர நியாய விலைக் கடைகளும், 21 மகளிர்சுயஉதவிக்குழுவினரால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளும், 6 மகளிர் சில்லறை விற்பனைநிலையங்களும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கூட்டுறவுத்துறை மூலமாக, முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகத்தில் 20சதவீதம் குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.