மேலும் அறிய
சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சரத்குமாரின் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் - அமைச்சர் மஸ்தான்
![சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் Minister Gingee KS Masthan says Lets see how Sarathkumar' 2 o clock dream will come true - TNN சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/0244263802da655e6ea2e5be0e6a14be1710315472181113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம்: சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார். அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது போன்றது அவரது கனவு என அமைச்சர் மஸ்தான் விமர்சனம் செய்துள்ளார்.
புகைப்பட கண்காட்சி
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு துவக்கி வைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். புகைப்பட கண்காட்சியில் ஆட்சியர் பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலினின் குரல்
அதனை தொடர்ந்து பேட்டியளித்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளதாகவும், ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலினின் குரல் ஒலிப்பதாகவும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் சென்றடைவதாக தெரிவித்துள்ளார்.
ஜாபர் சாதிக் விவகாரம் - சட்டம் தன் கடமையை செய்யும்
அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஸ்டாலின் பாதையில் கொண்டு செல்ல மக்கள் தயாராகி விட்டதாகவும், சட்டத்தை மதிக்கிறது தான் திமுகவின் அடிப்படை கொள்கை ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் சட்டரீதியாக தான் எல்லாத்தையும் சந்திக்க வேண்டும் என முதலமைச்சரின் கருத்தாக உள்ளது என கூறினார்.
2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும்
சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார் அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது போன்றது அவரது கனவு என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பட்ஜெட் 2025
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion