மரக்காணத்தில் புளியமர கட்டையை வைத்து மீன் பிடிக்கும் சிறிய மீனவர்களை தடுக்கும் பெரிய போட் மீனவர்கள்
விழுப்புரம் : மரக்காணம் கடலில் புளியமர கட்டையை வைத்து மீன் பிடிக்கும் சிறிய மீனவர்களை தடுக்கும் விதமாக பெரிய போட் மீனவர்கள் புளியமரத்தை அழிப்பதாக குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடலோர பகுதியில் சுமார் 19 மீனவ கிராமங்களில் உள்ளனர். இவர்களின் பிரதான தொழில், மீன்பிடித்தல் ஆகும், இந்த நிலையில் மண்டபாய் புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கு புளியை மரத்தை வாங்கி கடலில் விட்டு மீன்பிடிப்பது, இவர்களின் வழக்கமான தொழிலாகும். இந்த நிலையில் கடலூரைச் சேர்ந்த வலை இழுக்கும் பெரிய போட் இவர்கள் விட்டு வைத்திருந்த புளிய மரத்தை துண்டு துண்டாக வெட்டி கடலில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் கடலில் மீன் பிடிக்க சிரமமாக இருப்பதாகவும் சுமார் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் முறை செலவு செய்து ஒவ்வொரு இடத்திலும் புளிய மரங்களை வைத்து நாங்கள் சென்று மீன் பிடித்து வருகிறோம். இந்த நிலையில் பெரிய படகில் வருபவர்கள் இது போன்று மரங்களை அழித்துச் சொல்வதால் எங்களுக்கு அதிக அளவிலான நஷ்டம் ஏற்படுகிறது எனவும் அது மட்டும் இல்லாமல் எங்களின் வாழ்வாதாரம் முடக்கும் விதமாக பெரிய போட்டு உரிமையாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்