மேலும் அறிய

விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை அமோகம்

விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணர் அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணன் பெயரை உச்சரித்து அவரது சிலைக்கு பூஜை செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும் என்பதால் வீடுகளிலும் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். இதற்காக கிருஷ்ணர் பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை அமோகம்

கிருஷ்ணரை வீட்டிற்குள் வரவேற்கும் விதமாக அவரது பாதம் மாக்கோலமாக வரையப்படும். இதன் மூலம் கிருஷ்ணர், வீட்டிற்குள் நடந்து வருவதாக ஐதீகமாக இருக்கிறது. மேலும் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், சீடை, முறுக்கு ஆகியவற்றை படைத்து வழிபடுவார்கள். இந்த விழாவிற்கு தற்போது விழுப்புரம் நகரில் கிருஷ்ணர் பொம்மைகளின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் திரு.வி.க. வீதி, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்காக உள்ளது. சிறிய அளவிலான பொம்மைகள் ரூ.50-ல் இருந்து பெரிய அளவிலான பொம்மைகள் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை அமோகம்

வழிபாட்டு நேரம், செய்ய வேண்டியவை

தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி(Gokulashtami), ஜென்மாஷ்டமி(Krishna Janmashtami) என கிருஷ்ண ஜெயந்தி அழைக்கப்படும் நிலையில், மாலை வேளைகளில் இங்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் நடு இரவில் பிறந்ததாகக் கருதப்படும் கிருஷ்ணரின் பாதங்க வீட்டுக்குள் பூஜையறை வரை அரிசி மாவால் பதிந்து அவரை வரவேற்கும் விதமாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

மேலும் கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் ஆகியவற்றையும், சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைத்து வழிபடலாம். இவற்றை முடிந்த அளவுக்கு மாலை 6.00 – 7.00 மணிக்குள் செய்தால்  ஆலிழை கண்ணன் அடியெடுத்து வைத்து வீடுகளுக்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை அமோகம்

புராணத்தில் கிருஷ்ணர்

கடவுள் மகாவிஷ்ணுவின் 8ஆவது அவதாரம் கிருஷ்ணர் அவதாரம் ஆகும். அரக்கர்களை வதம் செய்வதற்காகவும் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்கவுமே கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.

மதுரா நகரில் வசுதேவர் - தேவகிக்கு எட்டாவது மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

கிருஷ்ணர் தன் இளம் வயதில் குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் வெண்ணெய் திருடி உண்டு, பிருந்தாவனத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம் வந்தார்.

கிருஷ்ணா உபதேசம்

கிருஷ்ணர் பிருந்தாவனப் பெண்களின் மனதில் குடிகொண்டு ராதையுடன் காதல் புரிந்தார். பாமா, ருக்மணியை மணமுடித்தார்.

மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு துணையாக இருந்து அர்ஜூனனுக்கு தேரோட்டியாக போர்க்களத்தில் வந்த கண்ணன் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.

விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை அமோகம்

குழந்தைகளுக்கு வேடம்

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியன்று தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்ணன், ராதைபோல வேடமிட்டு மக்கள் மகிழவும் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் செய்கின்றனர்.

வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த விழாவை அஷ்டமி ரோகிணி என அழைக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget