கள்ளக்குறிச்சி: போக்குவரத்து துறை அதிகாரியை லூசு என திட்டிய திமுக எம்எல்ஏவால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி அருகே அரசு விழாவில் திமுக எம்எல்ஏ போக்குவரத்து துறை அதிகாரியை பார்த்து லூசு என திட்டியதால் பரபரப்பு. முகம் சுழித்த அதிகாரிகள்.
கள்ளக்குறிச்சி அருகே திமுக எம்எல்ஏ போக்குவரத்து துறை அதிகாரியை பார்த்து அரசு விழாவில் லூசு என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் பகுதியில் மக்களை தேடி மனுக்கள் பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திமுக எம்எல்ஏ உதயசூரியன் போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் விட கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். உடனே அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி எங்கு இருக்கிறார் இருக்கிறாரா என கூட்டத்தில் கேட்க போக்குவரத்து துறை அதிகாரி ஆறுமுகம் என்பவர் இருக்கிறேன் என கீழே இருந்து தெரிவித்தார். அப்போது மற்றொரு பக்கம் இருந்து வந்த போக்குவரத்து துறை அதிகாரி இதோ இருக்கிறேன் என மேடைக்கு வந்தார். உடனடியாக அவருக்கு மேடையில் அமர சேர் குடுடா என கட்சிக்காரரை பார்த்து தெரிவித்த நிலையில் கீழிருந்த போக்குவரத்து துறை அதிகாரியை லூசு என திட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மேடையில் அமர்ந்திருந்த மற்ற துறை அதிகாரிகள் முகம் சுழிப்புடன் வருத்தம் ஏற்பட்டது.
இதுகுறித்து நாம் விசாரிக்க பொழுது தான் தெரியவந்தது கீழிருந்து போக்குவரத்து துறை அதிகாரி ஆறுமுகம் சங்கராபுரம் பணிமனை அதிகாரியாக இருந்தவர். இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால் இதோ இருக்கிறேன் சார் என தெரிவித்தார். ஆனால் மேலே அமரவளிக்கப்பட்டவர் கள்ளக்குறிச்சி பணிமனை 2 அதிகாரி சிவசங்கரன் (BM) ஆவார். கூட்டத்தில் எத்தனை அதிகாரிகள் எந்தெந்த பகுதிக்கு உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் என்பது கூட யோசிக்காமல் எம்எல்ஏ இதுபோன்று போக்குவரத்து துறை அதிகாரியை “லூசு” என அநாகரிகமாக திட்டியது வருத்தம் அளிப்பதாக சில அதிகாரிகள் புலம்பிச் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்