மேலும் அறிய
கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்து பெண் உயிரிழந்த விவகாரம் - தனியார் மருந்தக உரிமையாளர் கைது
தனியார் மருந்தக உரிமையாளர் வடிவேல் என்பவரை வேப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட தனியார் மருந்தக உரிமையாளர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில் அமுதா நான்கு மாத கர்ப்பிணியான இவர் வயிற்றில் இருக்கும் சிசு பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் அமுதாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளளார்
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அமுதாவுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மயக்க நிலையில் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலே அமுதா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இத்தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.பின்னர் அமுதாவிற்கு கருகலைப்பு செய்த அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மருந்தக உரிமையாளர் வடிவேல் என்பவரை வேப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்கேன் கருவி மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளது தெரிய வந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















