மேலும் அறிய
Advertisement
கடலூரில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை - போட்டிபோட்டு வாங்கி செல்லும் மக்கள்
’’நான் இறக்குமதி செய்த தொகை எனக்கும் கிடைத்தால் போதும் என்பதால் கிலோ 30 ரூபாய் என அறிவித்தேன்’’
தமிழகம் முழுவதும் பெய்த தொடர் கணமழையின் காரணமாகவும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ 120 ரூபாய்க்கு மேல் விலை உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடலூரில் தக்காளி விலை நேற்று கிலோ 90 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை ஆகி கொண்டிருந்த நிலையில் தற்போது கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் அந்த கடையில் பொதுமக்கள் தக்காளியும் வெங்காயமும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர். இங்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கடையின் உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில் - கர்நாடகா மாநிலம் போளூரில் இன்று 1.5 டன் தக்காளி மற்றும் 2 டன் வெங்காயம் இறக்குமதி செய்தேன். நான் இறக்குமதி செய்த தொகை எனக்கும் கிடைத்தால் போதும் என்பதால் கிலோ 30 ரூபாய் என அறிவித்தேன் மக்களும் ஆர்வமாக வந்து வாங்கி சென்றனர். பல இடங்களில் கிலோ 90 முதல் 150 விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் கொண்டு வரும் போக்குவரத்து செலவு மற்றும் லாபத்தினை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நான் மக்களால் தான் வளர்நதேன் எனவே அவர்கள் ஏற்கனவே இந்த கொரோனா காலத்தில் தக்காளி, வெங்காயம் விலையேற்றதால் கஷ்டம் நிலையில் ஆல்பம் பார்ககாமல் விற்பனை செய்யவேண்டும் என்பதால் விற்பனை செய்து வருகிறேன். நாளை தக்காளி வரத்து இருக்காமா என தெரியவில்லை வரத்து கிடைக்கும் போது இதே போல் மீண்டும் கிடைத்தால் இதே விலைக்கு விற்பனை செய்வேன், என்று தெரிவித்தார்.
மேலும் கடையில் விற்பனை தொடங்கிய 4 மணி நேரத்தில் 1000 பேருக்கு சுமார் ஒன்றரை டன் தக்காளி விற்று தீர்ந்து விட்டது, மீண்டும் நாளை இதேபோல் விற்பனை தொடரும் என கடை உரிமையாளர் ராஜேஷ் தெரிவித்து உள்ளார். நேற்று வரை கடலூரில் தக்காளி கிலோவுக்கு 90 ரூபாயில் இருந்து 130 ரூபாய் வரை விற்பனை ஆன நிலையில் இன்று அதே தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு கிடைப்பது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் தமிழக அரசும் காய்கறி விலையை கட்டுபடுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion