மேலும் அறிய

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்: நாளை போக்குவரத்து மாற்றம்! தவிர்க்க வேண்டிய சாலைகள் இதோ!

புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கபடுவதால் நகரப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுவதால் நகரப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது :

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி முழுதும் பல இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை 31ம் தேதி மதியம், ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் விஜர்சனம் செய்யப்படவுள்ளது. ஊர்வலம், நாளை மதியம் 12:00 மணிக்கு, சாரம் அவ்வை திடலில் இருந்து துவங்குகிறது. அதனையொட்டி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக நகரப் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலாப்பட்டு மார்க்கத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரும் டவுன் பஸ்கள், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து சிவாஜி சிலை நோக்கி சென்று, கொக்கு பார்க், ராஜிவ், இந்திரா சதுக்கம், நெல்லித்தோப்பு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

அதேபோல், பேருந்து நிலையத்தில் இருந்து புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் வலது பக்கம் திரும்பி மறைமலையடிகள் சாலை வழியாக இந்திரா, ராஜிவ் சதுக்கம் வழியாக காலாப்பட்டு செல்ல வேண்டும்.

காமராஜ் சாலையில் லெனின் வீதியிலிருந்து ராஜா தியேட்டர் வரை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலமானது நேருவீதியை கடக்கும் வரை அண்ணா சாலையில் மதியம் 3:00 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்படும். விநாயர் சிலை ஊர்வலத்தின் போது நேரு வீதி, காந்தி வீதி மற்றும் எஸ்.வி.பட்டேல் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

சாரம் அவ்வை திடலில், முத்தியால்பேட்டை மற்றும் நெல்லித்தொப்பு மார்க்கங்களில் இருந்து ஊர்வலமாக வரும் விநாயகர் சிலைகள், ராஜா தியேட்டர் சந்திப்பை வந்தடைய வேண்டும். அங்கிருந்து அனைத்து சிலைகளும், ஒரே ஊர்வலமாக நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி வழியாக அஜந்தா சிக்னல் அடைந்து, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு செல்லும். ஆகையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
மாந்தோப்பில் மறைந்திருந்த 1,000 ஆண்டு கால அதிசயம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை!
மாந்தோப்பில் மறைந்திருந்த 1,000 ஆண்டு கால அதிசயம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget