மேலும் அறிய

குடிநீர் புகாரா? 24 மணிநேரத்தில் தீர்வு! - விழுப்புரம் ஆட்சியரின் அதிரடி உத்தரவு...

குடிநீர் விநியோகத்தில் பிரச்சனைகளை களைந்திட டேங்கர் லாரிகளைப் பயன்படுத்தியும் மற்றும் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கிடுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில்., விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் நல்ல முறையில் விநியோகிக்கப்பட்டுவருவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், குடிநீர் வழங்கும் நேரங்களில் ஏதேனும் இயந்திர கோளாறு மற்றும் சிறு பழுதுகளால் குடிநீர் வழங்க தடை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் கூடுதலாக 9 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பைப் லைன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகித்திட அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட ஆஷா குளப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் குடிநீர் ஆதாரங்கள் குறித்தும், பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருவது குறித்தும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், அனந்தபுரம் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க அனந்தபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணியின் மூலம் பொது மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாகவும், அனைத்து குடிநீர் ஆதாரங்களிலிருந்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருவது குறித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் சிறு பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு பொது விநியோகிக்கப்படவேண்டுமென குடிநீர் மக்களுக்கு தடையின்றி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஊரக பகுதியில் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யும் 12 ஊராட்சிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் நீர் அளவு குறைந்துள்ள திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்தி பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு ஏற்படுத்துவதற்கு மதிப்பீடு தயார் செய்து கருத்துரு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செஞ்சி. ஒலக்கூர், மேல்மலையனூர் மற்றும் காணை ஊராட்சி ஒன்றியங்களில் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ள இடங்களை கண்டறிந்து ஊராட்சி நிதியிலிருந்து அத்தகைய நீர் ஆதாரங்களை ஆழப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டுமென சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பெருமளவு சுத்தப்படுத்தும் நடவடிக்கை (Mass Cleaning) மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சிறுமழையானாலும் உடனே நீர் தேங்கும் இடத்தினை கண்டறிந்து அவ்விடத்தில் உரிய உள்ளாட்சி பணியாளரை நியமித்து அம்மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உட்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குடிநீர் விநியோகத்தில் பிரச்சனைகளை களைந்திட டேங்கர் லாரிகளைப் பயன்படுத்தியும் மற்றும் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கிடுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பருவமழைக் காலத்திற்கு முன்னதாக. தூர்வாரும் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவண்ணம் செயல்திட்டம் தயாரித்து எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget