மேலும் அறிய

"ஒப்பிடாதீர்கள்... அதுதான் முதல் தவறு!" - பெற்றோர்களின் கண்களைத் திறந்த சமுத்திரக்கனி!

ஒப்பீடுதான் குழப்பத்தின் வேர்; ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்களே" என விழுப்புரம் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சமுத்திரக்கனி பேச்சு

விழுப்புரம்: ஒப்பீடுதான் குழப்பத்தின் வேர்; ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்களே" என விழுப்புரம் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி பேசினார்.

 

"குழந்தைகளை ஒருபோதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்; அந்த ஒப்பீடுதான் குழப்பங்களின் தொடக்கப்புள்ளி" என விழுப்புரத்தில் நடைபெற்ற பள்ளி விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி உருக்கமாகப் பேசினார்.

பள்ளி ஆண்டு விழா:

விழுப்புரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 31-வது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் திரைக்கலைஞரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

பெற்றோர்களுக்கான வேண்டுகோள்:

விழா மேடையில் பேசிய அவர், இன்றைய சமூகத்தில் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் நிலவும் மனப்போக்கு குறித்து கவலை தெரிவித்தார். அவர் பேசுகையில்: "பெற்றோர்கள் எப்போதும் தன் பிள்ளை மற்ற பிள்ளைகளைப் போல் இல்லையே என வருந்துகிறார்கள். அதேபோல், மாணவர்களும் நான் அவனைப் போல் இல்லையே எனத் குழப்பமடைகிறார்கள். உண்மையில், எந்தக் குழந்தையும் இன்னொரு குழந்தையைப் போல இருக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது (Unique) மற்றும் சிறப்பு வாய்ந்தது (Special)."

தொடர்ந்து பேசிய அவர், ஒரு குழந்தைக்குத் தெரிந்த விஷயம் மற்றொன்றுக்குத் தெரியாமல் இருக்கலாம், அதேபோல் ஒருவரிடம் இல்லாத திறமை மற்றவரிடம் இருக்கலாம் என்பதால், குழந்தைகளை ஒப்பிடுவதை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சமூகப் பொறுப்புள்ள சினிமா:

திரைத்துறை குறித்துப் பேசிய சமுத்திரக்கனி, சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.

"நாங்கள் வெறும் பாட்டு, சண்டைக்காக மட்டும் உழைக்கவில்லை."

"சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்."

"இன்று மட்டுமன்றி, இன்னும் 20 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் எங்களின் படைப்புகள் ஏதோ ஒரு கருத்தைப் பேச வேண்டும்."

இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுடன் படைப்புகளை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவனாக இருப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

இந்த விழாவில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சமுத்திரக்கனியின் இந்த எதார்த்தமான பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget