மேலும் அறிய

தீபாவளி: விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை ( E- sevai ) மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 2008-ம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் பொது இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை ( E- sevai ) மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் கோரும் இடத்திற்கு தொடர்புடைய வட்டாட்சியரின் கருத்துரை, மனுதாரின் மனு, படிவம்- ஏ.ஈ-5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், லைசென்ஸ் என்ஜினீயர் மூலம் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் ), ரூ.20-க்கான முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற வேண்டும்.

மேலும் உரிமக் கட்டணம் ரூ. 600யை உரிய அரசு கணக்கில் இ-செலான் மூலமாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச்சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்-2, சேவை கட்டணமாக ரூ.500 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.அரசு உத்தரவின்படி தற்காலிக பட்டாசு உரிமம் கோரி பொது இ-சேவை மையங்கள் மூலம் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை

அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 26ம் தேதி நவம்பர் 12 ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 
கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நவம்பர் 12ம் தேதி தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget