உளவுத்துறை உதயநிதியின் எடுபிடியாக உள்ளது - சி.வி.சண்முகம் காட்டம்
கடந்த பத்து நாட்களில் நாமக்கல்லில் பத்தாயிரம் போதை மாத்திரை, மதுரையில் 108 கோடியில் போதை பொருளும், உளுந்தூர்பேட்டை பள்ளி மாணவர்களிடத்தில் 500 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்படுகிறது - சி.வி.சண்முகம்
விழுப்புரம்: முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருடன் நெறுக்கத்தை பயன்படுத்தி கொண்டு சர்வேதச அளவில் போதை பொருள் கடத்தலை ஜாபர் சாதிக் கொண்டு சென்றுள்ளதாகவும், உளவுத்துறை உதயநிதியின் எடுப்பிடியாக செயல்படுவதாக விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அதிமுகவின் சார்பில், விழுப்புரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் காந்தி சிலையிலிருந்து ரயில் நிலையம் வரை அதிமுகவினர் கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக அரசு தமிழகத்தில் போதை நடமாட்டதை தடுக்க தவறி அரசாகவும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பள்ளி மாணவர்களிடம் கஞ்சா
அதனை தொடர்ந்து பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கஞ்சா, கஞ்சா சாக்கேலெட் கஞ்சா எண்ணெய், போன்ற போதை பொருட்கள் கிடைப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டிய போது செவி சாய்க்காத முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் போதை பொருட்கள் கடத்தியதாகவும், அவர் முதலமைச்சர் குடும்பத்தினருடன் நெருங்கி இருந்ததால் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த பத்து நாட்களில் 180 கிலோ கஞ்சா கடத்தியது, நாமக்கல்லில் பத்தாயிரம் போதை மாத்திரை மதுரையில் 108 கோடியில் போதை பொருளும், உளுந்தூர் பேட்டையில் பள்ளி மாணவர்களிடத்தில் 500 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றபடுகிறது.
உளவுத்துறை உதயநிதி ஸ்டாலினின் எடுபிடியாக உள்ளது
இத்தனை பறிமுதல் செய்யாத அரசு பத்து நாட்களில் எப்படி பறிமுதல் செய்கிறார்கள் இதில் தங்களுக்கு சந்தேகம் எழுவதாகவும், உளவுத்துறை இதில் முற்றிலுமாக பொய்த்து போய் உள்ளதாகவும், உளவுத்துறை உதயநிதி ஸ்டாலினின் எடுபிடியாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். உளவு துறை ஐஜியாக உள்ளவர் அவரது அலுவலகத்திற்கு செல்கிறாரோ இல்லையோ உதயநிதியின் வீட்டிலயே இருபதாகவும், உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டிருந்தால் இது போன்ற சம்பவம் நடைபெற்றிருக்காது என சிவி சண்முகம் கூறியுள்ளார். டெல்லியிலிருந்து மட்டும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு போதை மருந்துகள் கடத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலிருந்து மட்டும் அவர் எவ்வளவு கடத்தி இருப்பார்.
முதல்வர் குடும்பத்துடன் ஜாபர் சாதிக் நெருக்கம்
ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்தினருடன் நெருக்மாக உள்ளார், மழை நிவாரணம் அளித்து இருக்கிறார். போதை மன்னனுடன் இணைந்து படமெடுத்துள்ள கனிமொழி இதற்கு என்ன சொல்ல இருக்கிறார் என்றும் அமைச்சர்கள் மீது வழக்கு என்றால் வாய் திறக்கும் முதலமைச்சர் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏன் வாய்திறக்காமல் உள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருடன் நெறுக்கத்தை பயன்படுத்தி கொண்டு சர்வேதச அளவில் போதை பொருள் கடத்தலை ஜாபர் சாதிக் கொண்டு சென்றுள்ளதாக சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜாபர் சாதிக்குடன் காவல் துறையுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மீது விசாரனை செய்ய வேண்டுமெனவும் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமென ஆளுநரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.