மேலும் அறிய

அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி - 2 பேர் கைது

கடலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாற்றுத்திறனாளி மற்றும் விதவை பெண்ணிடம் பண மோசடி-இருவரை கைது செய்த காவல்துறையினர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி, இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
 
அம்மனுவில், தனது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பவர் பிளான்ட் கான்ட்ராக்டில் சித்தாள் வேலை செய்தபோது, அங்கு வேலை செய்து கொண்டு இருந்த சிதம்பரம் மதுராந்தநல்லூர் சரவணன் என்பவர் அறிமுகமாகி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் எனது நண்பர் பிரபு என்பவர் அதிகாரியாக இருப்பதாகவும், அவர் பல அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு அரசு வேலை வாங்கி தர உதவி செய்வார் என கூறியதால் கடந்த 2.4.2022 ஆம் தேதி கடலூர் பழைய கலெக்டர் ஆபிஸ் அலுவலத்திற்கு சென்றுபோது பிரபு என்பவரை அறிமுகப்படுத்தினார்.
 
அப்போது பிரபு என்பவர் 1,20,000 பணம் கொடுத்தால் OA வேலை கிடைக்கும் மாதம் 20 ஆயிரம் சம்பளம் என கூறினார். அப்போது நான் கணவனை இழந்து கஷ்டபடுகிறேன் என்னால் அவ்வளவு பணம் தர முடியாது. நகையை வைத்து 50 ஆயிரம் தருகிறேன் என கூறினேன். மறுநாள் நகையை அடமானம் வைத்து 50 ஆயிரம் பணத்தை வைத்துக்கொண்டு பிரபுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
சரவணன் என்பவர் நெய்வேலி வந்து அவரது பல்சர் வண்டியில் என்னை ஏற்றிக்கொண்டு கடலூர் பழைய கலெக்டர் ஆபிஸ் வந்து முன்பு பேசிய அதே இடத்தில் பிரபுவிடம் ரூபாய் 50,000 கொடுத்தபோது உங்களுக்கு OA வேலை கிடைத்துவிடும் வேறு யாராவது விதவைகள் இருந்தால் கூறுங்கள் அவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என கூறினார்.
 
 பின்பு வேலை சம்பந்தமாக கேட்டபோது மீதி பணத்தை கொடுத்தால் வேலை கிடைக்கும் என கூறியதால் சிறுக சிறுக மொத்தம் ரூபாய் 1,35,000 கொடுத்து உள்ளதாகவும், தன்னை போலவே கணவனை இழந்த எங்க ஊர் மணிகண்டன் மனைவி மலர்விழி என்பவர் 1,50,000 கொடுத்து உள்ளதாகவும், மலர்விழிக்கு தெரிந்தவரான நெய்வேலி கலைஞர் நகரை சார்ந்த முருகேசன் மகன் செல்வம் என்பவர் ரூபாய் 1,80,000 கொடுத்து உள்ளார். நாங்கள் மூவரும் வேலை சம்மந்தமாக சரவணனுக்கு போன் போட்டும், நேரில் சென்றும் கேட்டபோது வெவ்வேறு காரணங்களை சொல்லி ஏமாற்றி வந்தார்கள் என்றும்,எங்கள் மூவரையும் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
 ரேவதி கொடுத்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட குற்றபிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவு பிறப்பித்ததின்பேரில் மாவட்ட குற்றபிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அவர்கள் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் ஆனந்தன், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் சுப்பிரமணியன் முதல் நிலை பெண் காவலர் சதீஷ் ஆகியோர் சிதம்பரம் மதுராந்தகநல்லூர் வீட்டின் முன்பு நின்றிருந்த சரவணன் என்பவரையும் கடலூர் தனலட்சுமி தனியார் மருத்துவமனையில் முன்பு நின்று கொண்டிருந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான பிரபு ஆகிய இருவரையும் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததின்பேரில் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். எதிரிகள் சரவணன், பிரபு ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது தொடர்பாக ஏற்கனவே கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget