மேலும் அறிய

கடலூரில் தொடர் மழை - ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்ட உள்ள வீராணம் ஏரி

’’வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவான 47.5 அடியினை எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது’’

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை ஆகிய ஓடைகளின் வழியாக ஏரிக்கு வரும்.  இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினசாி தண்ணீர் அனுப்பப்படுவதாலும், மேலும் கீழணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் முழுமையாக நிரம்பி இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம்  45 அடியாக குறைந்தது. 

கடலூரில் தொடர் மழை - ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்ட உள்ள வீராணம் ஏரி
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் கீழணை மற்றும் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கீழணையில் தண்ணீர் வரத்து இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. மேலும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் வீராணம் ஏாிக்கு மழைநீா் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் 45 அடியாக இருந்த வீராணம் ஏரியின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து நேற்று மாலை நிலவரப்படி 46 அடியை எட்டியது. 

கடலூரில் தொடர் மழை - ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்ட உள்ள வீராணம் ஏரி
 
இந்த ஏரியின் பாசன வசதியால் இந்த வீராணம் ஏரியை சுற்றியுள்ள சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலமாக நீர் பாசன வசதி பெறுகிறது இதனால் இந்த ஏரியானது சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியமான பாசன நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்படும் குடிநீர் அனுப்பும் நீர் ஆதாரங்களில் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓாிரு நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.5 அடியினை எட்டிவிடும் என தெரிகிறது, இதனால் வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget