மேலும் அறிய

கஞ்சாபுரமாகும் விழுப்புரம்...! மாணவர்களை டார்கெட் செய்யும் வியாபாரிகள் - இதுவரை 21 வழக்குகளில் 35 பேர் கைது

22.03.2022 வரை மொத்தம் 21 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 10.360 கிலோகிராம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்கள், பேருந்து நிலையம், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமிபக்கலாமாக் கஞ்சா வெளிப்படையாக விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையகயுள்ளனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற இழிவான சம்பங்கள் தலைதுக்கி உள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்ணகிப்பாளர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 22.03.2022 வரை மொத்தம் 21 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 10.360 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டதில் ஆறு இருசக்கர வாகனங்களும்,  கஞ்சா மொத்த மதிப்பு சுமார் ரூ.1,00,000  எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி போன்றவற்றை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விறபனை செய்தவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு விபரம்:

கஞ்சாபுரமாகும் விழுப்புரம்...! மாணவர்களை டார்கெட் செய்யும் வியாபாரிகள் - இதுவரை 21 வழக்குகளில் 35 பேர் கைது

மேலும், கஞ்சா வியாபாரிகளின் இலக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தான். ஒருமுறை இதற்கு பழக்கப்படும் மாணவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மாணவர்களின் சிந்தனை சீரழிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். இந்த பாதிப்பு நாளடைவில் வன்முறையாகவும் வளர்கிறது. சமீபகாலமாக  சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கொலைகளுக்கு கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது. பொது இடங்களில் மறைமுகமாக கிடைத்த கஞ்சா, தற்போது ஒருபடி மேலே சென்று கல்வி நிலையங்களிலும் தாராளமாக கிடைக்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, விழுப்புரம் நகரபகுதி, திண்டிவனம், பிரம்மதேசம், மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா, பான்மசாலா போன்றவை வெளிபடையாக விற்பனை நடைபெற்று வருகிறது.

கஞ்சாபுரமாகும் விழுப்புரம்...! மாணவர்களை டார்கெட் செய்யும் வியாபாரிகள் - இதுவரை 21 வழக்குகளில் 35 பேர் கைது

கஞ்சா போதைக்கு அடிமையாகும் சில மாணவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கஞ்சா வியாபாரிகள், அவர்களுக்கு கமிஷன் கொடுப்பது, சில பாக்கெட்கள் இலவசமாக கொடுப்பது என்று தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். தற்போது பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள் டோப் விற்கப்படும் இடத்திற்கு வந்து வாங்கி செல்வதோ அல்லது புரோக்கருக்கு பணம் கொடுத்து வாங்கி கொள்வதோ எளிமையானதாகவும், சகஜமானதாகவும் மாறியுள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் உயர் நடுத்தர இளம்பெண்கள் அதிகம் போதைக்கு அடிமையாகி சீரழிகின்றனர். இவை அனைத்தும் பெரும்பாலும் போலீசாரின் ஆசியோடு தான் நடக்கிறது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இது போன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும், பொது இடங்களில் கஞ்சா புழங்குவதாகப் பலரும் போலீசிடம் கூறியும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது பெயரளவில் கூட சட்டம் பாயவில்லை. எவ்வித நீதி விசாரணையும் நடத்தப்படவில்லை. இத்தகைய சட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்கும் என நம்ப முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

கஞ்சாபுரமாகும் விழுப்புரம்...! மாணவர்களை டார்கெட் செய்யும் வியாபாரிகள் - இதுவரை 21 வழக்குகளில் 35 பேர் கைது

இது குறித்து மனநல ஆலோசகர்கள் தெரிவித்தாவது:-

ஆசிரியர்களும் அரசாங்கமும் மட்டும் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறும் மனநல ஆலோசகர்கள், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லை. அதனால் அவர்கள் திசை மாறிச் செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போவதைத்தான் முக்கியக் காரணமாக  கூறுகிறார்கள்.

கஞ்சாபுரமாகும் விழுப்புரம்...! மாணவர்களை டார்கெட் செய்யும் வியாபாரிகள் - இதுவரை 21 வழக்குகளில் 35 பேர் கைது

போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மாணவர்களை அதிலிருந்து மீட்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து மீள உதவவும் பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயமாகிறது. இவை ஒருபுறமிருக்க தங்கள் பிள்ளைகள் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய முதல் கடமை பெற்றோருக்குத் தான் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  இந்த நிலையில் காவல்துறை கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget