ஆரோ ஆர்ச்சார் டூ இயற்கை முறை பண்ணையின் 100 ஏக்கரை உள்ளடக்கிய ஒரு இரகசிய நிலப்பரிவர்த்தனை ஒப்பந்தம்
ஆரோவில் சமூகம் அதன் தொடக்கத்திலிருந்தே அது வரையறுத்துள்ள மதிப்புகள் மற்றும் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் உறுதியாக நிற்கிறது.
ஆரோவில் சமூகத்தின் போற்றுதலுக்குரிய ஆரோ ஆர்ச்சார் டூ இயற்கை முறை பண்ணையின் 10௦ ஏக்கரை உள்ளடக்கிய ஒரு இரகசிய நிலப்பரிவர்த்தனை ஒப்பந்தம் வெளிப்பட்டுள்ளது.
நிலப் பரிவர்த்தனை ஆரோவில்லின் முக்கிய மதிப்புகள் மற்றும் சொத்துக்களை அச்சுறுத்துகிறது ஆரோவில், தமிழ்நாடு - ஆரோவில், ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் புத்துயிர் மற்றும் நிலையான நகர்ப்புற வாழ்வின் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சின்னமாக உள்ளது. சர்ச்சைக்குரிய, நிலப்பரிவர்த்தனைகளைச் சுற்றியுள்ள முறைகேடுகளால் மையத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. நிகழ்வுகளின் திடுக்கிடும் திருப்பத்தில், ஆரோவில் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அது சாத்தியமான தவறான நிதி நிர்வாகத்தை குறிக்கும் அதே வேளையில் அதன் மிக அடிப்படை மதிப்புகளின் மையத்தையும் தாக்குகிறது. ஆரோவில் சமூகத்தின் போற்றுதலுக்குரிய ஆரோ ஆர்ச்சார் டூ இயற்கைமுறை பண்ணையின் 10௦ ஏக்கரை உள்ளடக்கிய ஒரு இரகசிய நிலப்பரிவர்த்தனை ஒப்பந்தம் வெளிப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆரோவில்லின் நெறிமுறையின் சாத்தியமான சிதைவு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இந்த அச்சமூட்டும் பரிவர்த்தனையின் சூழ்நிலைகளையும், அதன் தொலைநோக்கு தாக்கங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட இந்த செய்திக்குறிப்பு முயல்கிறது.
இந்த நிலப் பரிவர்த்தனையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இரகசிய நிலப் பரிவர்த்தனை: ஆரோவில் நிலத்தின் முக்கியமான, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியான ஆரோ ஆர்ச்சார்டின் 10 ஏக்கர் நிலம், ஆரோவில் சமூகத்தை கலந்து ஆலோசிக்காமல், அந்நிலத்தில் வசிக்கும் மக்களுக்குத் தெரிவிக்காமல், தனியார் டெவலப்பரிடம் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
அடிப்படைக் கோட்பாடுகள் புறக்கணிப்பு: இந்த ஒப்பந்தம் ஆரோவில்லின் அடிப்படைக் கொள்கைகளை மீறியது ஆகும், இதில் கூட்டூ முடிவெடுத்தல், ஆரோவில்லின் நிறுவனரான ஸ்ரீ அன்னையின் தொலைநோக்கிற்கான மரியாதை ஆகியவை அடங்கும். இந்த நிலத்தை ஆரோவில்லுக்கு உணவு உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் 1965ஆம் ஆண்டு அன்னையே வாங்கினார்.
அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பின் மீதான தாக்கம்: இந்த நிலப் பரிவர்த்தனையானது ஆரோஜர்ச்சார்டின் முக்கிய உள்கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. இதில் பிரதான ஆழ்க்குழாய்க்கிணறு, மேம்பட்ட நீர்ப்பாசன அமைப்பு, கோசாலை பசுக்களுக்கான சரணாலயம்), குடியிருப்பாளர்கள் வசித்துவரும் குடியிருப்பு கட்டிடம், பழத்தோட்டங்கள், வயல்வெளிகள், பிரதான வாயில் மற்றும் சாலை, ஒரு கம்பீரமான மற்றும் மதிப்பிற்குரிய ஆலமரம் ஆகியவையும் அடங்கும். இது பண்ணையின் மைய உள்கட்டமைப்பை சமரசம் செய்வதோடு மட்டுமின்றி, ஆரோவில் சமூகத்தில் அதிக உற்பத்தி மற்றும் ஆற்றல் மிக்க ஒன்றாக இருக்கும் பண்ணையின் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, ஆரோவில்லின் முக்கிய உணவுப் பாதுகாப்பிற்கும் ஒரு பலத்த அடியாகும் ஈவிரக்கமற்ற இந்த முடிவு இந்நிலத்தின் வீடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையையும். இந்நிலத்தில் வாழ்ந்துகொண்டு மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளின் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும்.
குறிப்பிடத்தக்க நிதி ஏற்றத்தாழ்வு: பரிவர்த்தனை செய்யப்பட்ட ஆரோஜர்ச்சார்ட் நிலத்தின் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பு ரூபாய் 65 - 105 கோடி ஆகும், இந்த நிலங்களுக்கு பதிலாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூபாய் 1௦ - 20 கோடி ஆகும், இது ஆரோவில்லுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளதைக் குறிக்கிறது.
சாத்தியமான நெறிமுறை மீறல்கள்: நிர்வாகப் பேரவையின் (கவர்னிங் போர்டின்) செயலாளரின் அலுவலகம் மற்றும் அவர்களால் நியமிக்கப்பட்ட நில அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட ஒப்பந்தத்தின் இரகசியத்தன்மை, நெறிமுறை நடத்தை மற்றும் நோக்கங்கள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
ஆரோவில்லின் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல்: தேவையான நிலங்களை முன்கூட்டியே வாங்காமல் கிரவுன் ரோடு திட்டத்தை அவசரமாகத் தொடங்கியது, நிலங்களின் விலைகளை உயர்வதற்கும் ஆரோவில்லின் சின்னமாகத் திகழும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் வழிவகுத்தது. இது ஆரோவில்லின் வளர்ச்சியை பெரிதும் தடுக்கிறது, ஆரோவில்லின் தொலைநோக்குக்கு ஏற்ப ஆரோவில் வளர்ச்சியை செயல்படுத்துவதைக் கடினமாக்குகிறது. குடியிருப்பாளர்கள் பேரவையின் செயற்குழு, ஆரோவில் சமூகத்தின் கவலைகளுக்கு குரல் கொடுத்து, இந்த வெளிப்படைத்தன்மையற்ற பரிவர்த்தனையை வன்மையாகக் கண்டிக்கிறது. ஆரோவில்லின் நெறிமுறைகளின் சாராம்சம் - ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கம் - ஆகியவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த பரிவர்த்தனை கடுமையான நிதி குறைமதிப்பையும் சுட்டிக்காட்டுகிறது, இதனால் ரூ. 5௦ - 90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலப் பரிவர்த்தனையை மறுமதிப்பீடு செய்து மாற்றியமைக்க உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும். ஆரோவில் சமூகம் அதன் தொடக்கத்திலிருந்தே அது வரையறுத்துள்ள மதிப்புகள் மற்றும் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் உறுதியாக நிற்கிறது. மேலும் தற்போது ஆரோவில்லின் எதிர்காலத்தை ஆழமாக அச்சுறுத்தி வரும் முறைகேடுகள், ஆதாய முரண்கள் ஆகியவற்றை கண்டிக்கிறது.