விழுப்புரத்தில் அண்ணாமலை வருகையையொட்டி வைக்கப்பட்ட பேனர் அகற்றம் - பாஜகவினர் சாலை மறியல்
விழுப்புரம் : அண்ணாமலை வருகையையொட்டி பாஜகவினர் அனுமதியோடு வைக்கப்பட்ட பேனரை போலீசார் அகற்றியதை கண்டித்து ரயில் நிலையம் அருகே சாலை மறியல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்ணாமலை வருகையையொட்டி பாஜகவினர் அனுமதியோடு வைக்கப்பட்ட பேனரை போலீசார் அகற்றியதை கண்டித்து ரயில் நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற 18 ஆம் தேதி 19 ஆம் தேதி வருகை புரிவதால் அண்ணாமலையை வரவேற்று நடைபயனத்திற்கு பேனர்களை நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கடந்த ஒட்டினர். இந்நிலையில் போலீசார் மேம்பால பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஆறு பேனர்களையும் அகற்றியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் இன்று விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விழுப்புரம் புதுச்சேரி சாலையை மறித்து பேனர் அகற்றப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
பாஜகவினரின் அரைமணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தபோது பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதை கைவிட்டு ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜகவினரை மறியலை கைவிட போலீசார் கூறியபோது மறுத்ததால் வலுகட்டாயமாக பாஜகவினரை போலீசார் அப்புறப்படுத்தியபோது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழுப்புரம் வருகை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திண்டிவனம், செஞ்சி பகுதிக்கு நாளை 16ம் தேதி வருகை தருகிறார். சென்னையிலிருந்து திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையத்திற்கு மாலை 3:00 மணிக்கு வருகை தரும் அவருக்கு வடக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.தொடர்ந்து அங்கிருந்து பாத யாத்திரையாக கட்சியினருடன் காந்தி சிலைக்கு செல்கின்றனர். அங்கு தென்கோடிப்பாக்கம் முரளி ரகுராமன், ஊராட்சி தலைவர் ராஜசேகர் தலைமையில் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே மாலை 6:00 மணிக்கு நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து 17ம் தேதி மாலை 4:00 மணியளவில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மாலை 6:00 மணியளவில் மயிலம் கூட்டேரிப்பட்டில் நடக்கும் நிகழ்ச்சியிலும் மாநிலத் தலைவர் பங்கேற்கிறார்.