மேலும் அறிய
Advertisement
அதிமுக உட்கட்சித் தேர்தல்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் மோதல் - 4 பேர் கைது
கடலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் தலைமையில் பத்து நபர்களும், நகர துணைச் செயலாளர் கந்தன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்
தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியின் உட் கட்சி தேர்தலுக்கான விண்ணப்ப மனு பெரும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மனு விண்ணப்பிக்கும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தின் நான்கு பகுதிகளாக அதிமுக சார்பில் பிரிக்கப்பட்டு அந்த அந்த பகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள் இடம் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் அருகே உள்ள பாதிரிகுப்பம் பகுதியில் அமைந்து உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விண்ணப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் அவர்களின் ஆதரவாளர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து திடீரென மோதி கொண்டனர். இதில் கடலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் தலைமையில் பத்து நபர்களும், நகர துணைச் செயலாளர் கந்தன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரண்டு தரப்பிலும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு இருந்தது. திடீரென அதிமுக வினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க கடலூர் அதிமுக அலுவலகத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை இருதரப்பினர் குடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து மற்றும் மணி என்பவர் குடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்பாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் அவர்கள் திமுகவை சேர்ந்த அய்யப்பன் அவர்களால் தோற்கடிக்கப்பட்டார். இதற்கு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை தான் காரணம் என பல்வேறு தரப்பினர் கூறி வந்த நிலையில் தற்பொழுது நகர துணைச் செயலாளர் கந்தன் அதிமுகவை சேர்ந்த எம்.சி. சம்பத் சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கு தான் காரணம் என பல தரப்பினர் கூறி வருகின்றனர் ஆனால் இதற்கு காரணமானவர்கள் யார் என்று கடவுளுக்கு தெரியும் அதிமுகவின் தோல்விக்கு காரணமானவர்களை அய்யனார் தண்டிப்பார் என கூறி அய்யனார் சிலை மீது சத்தியம் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion