மேலும் அறிய
Advertisement
வேலூர் பேய் மழை: உதவிக்கு அழைக்க தொடர்பு எண்களை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்!
ஒவ்வொரு வட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
வேலூர் மாவட்டத்தில் தொடருந்து பெய்து வரும் கனமழை, மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் தொலைபேசி எண் அறிவிப்பு. தாழ்வான பகுதி மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள முகாம்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்காள விரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளிலும், நீர் நிலைகளுக்கு அருகாமைமையிலும் வசிக்கும் பொதுமக்கள் அருகாமையில் உள்ள நிவாரண முகாமுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், எனவும் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை தேவையின்றி இயக்க வேண்டாம், எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நேரத்தில் வீசும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் தடைபடும் என்பதால் பொதுமக்கள் தேவைக்கேற்ப மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை தேவையான அளவிற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் ஆட்சியர் அறிவுற்தியுள்ளார்.
மழை தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிலோ அல்லது 0416- 2258016 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்,
வேலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அவர்களை 7397389320 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அதேபோல குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புகார்களை குடியாத்தம் நகராட்சி ஆணையர் 7397392686 என்ற எண்ணிலும், பேர்ணாம்பட்டு நகராட்சி பகுதிக்கு பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் 7397397672 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அதேபோல வேலூர் மாவட்டத்தில் ஏற்படும் மழை பாதிப்புகள் தொடர்பாக ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் நிலையில் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்- 9445000417, அணைக்கட்டு - 94448386 87,
காட்பாடி- 8870280192,
கே வி குப்பம்- 9952314993,
குடியாத்தம்- 9487756855, பேர்ணாம்பட்- 9944725575
வட்டாட்சியர்கள் தொடர்பு எண்:
வேலூர்-7402606477, கணியம்பாடி-7402606481, அணைக்கட்டு- 7402606485,
காட்பாடி-7402606489,
கே.வி.குப்பம்- 7402606493,
குடியாத்தம்-7402606498
ஒவ்வொரு வட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அவர்களது தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion