தடையை மீறி காளைவிடும் திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம்
ஆரணி அருகே தடையை மீறி காளைவிடும் திருவிழாவில் நடைபெற்றதில் 20க்கும் மேற்பட்ட காளைப்பிடி வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காளைவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல இந்தாண்டு 70-வது ஆண்டை முன்னிட்டு காளைவிடும் திருவிழா வெகுவிமர்சையாக இன்று கொண்டாடபட்டு வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் காவல்துறை மற்றும் வருவாய் துறை காளைவிடும் விழா, ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை இருப்பினும் கொளத்தூர் கிராமத்தில் தடையை மீறி இன்று காளை விடும் திருவிழா நடைபெற்றது. இந்த காளைவிடும் விழாவில் வேலூர் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட பகுதியிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. அதில் காளைகளை உற்சாகப்படுத்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் பங்கேற்று உற்சாகப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து காளையின் கழுத்தில் கயிறு கட்டி அதனை காளை பிடி வீரர்கள் பிடித்து அடுக்குவார்கள், அதில் ஒரு காளையை பிடிக்க மாடுபிடிவீரர்கள் முயன்றனர். அப்போது பார்வையிட வந்த நபரை திடிரென காளை துரத்தியது, வீட்டினுள் சென்று காப்பாற்றி கொள்ள முயன்றார். அப்போது வீட்டின் கதவு முடியிருந்து அங்கு இருந்தவரை காளை கொம்புகளால் தூக்கி வீசியபோது வீட்டின் மேற்கூரையில் இடித்து காளை மாட்டின் அடியில் சிக்கினார். அதன் பிறகு காளை அங்கு இருந்து ஓடியது. அதனைத் தொடர்ந்து காளைகளை வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீரி பாய்ந்தது. அதன் பிறகு சீரிய காளைகள் காளை விடும் விழாவை பாரக்க வந்தவர்களை தும்சம் செய்து. காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளை விடும் திருவிழாவில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் காலை விடும் திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட காளைபிடி வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆனால் மருத்துவ துறையினர் சிகிச்சை அளிக்க யாரும் இல்லாத காரணத்தினால் மாடுபிடி வீரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆரணி அருகே தடையை மீறி நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட காளைபிடிவீரர்கள் படுகாயமடைந்த சம்பவத்திற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் தற்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில் அனுமதியின்றி காளை விடும் விழாவை நடத்திய விழா குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும், மேலும் காயமடைந்த மாடுபிடி வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.