பட்டதாரி தேர்விற்கு வேலைவாய்ப்பு மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு
மத்திய பணியாளர்கள் தேர்வாைணயத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்விற்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
![பட்டதாரி தேர்விற்கு வேலைவாய்ப்பு மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு Tiruvannamalai District Collector Murugesh notification for free training course in employment center for graduate examination TNN பட்டதாரி தேர்விற்கு வேலைவாய்ப்பு மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/f37fb5a667ae0810a3a68cc0a6c281a41681818276029109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய பணியாளர்கள் தேர்வாைணயத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்விற்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 'ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-–2023' தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதியன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை அறிவித்துள்ளது.பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வி தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள் சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCfileserver/PortalManagement/UploadeFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியில் உள்ளது. இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணைத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க வருகிற மே மாதம் 3-ந்தேதி கடைசி நாளாகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே மாதம் 4-ந்தேதி ஆகும். தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை மாதத்தில் ஆந்திர மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக் குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservice.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற YOU Tube சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன் பெறலாம். எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)