![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தை வழி மடக்கி நடத்துனரை நையப்புடைத்த மர்ம நபர்கள்
திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தை வழியில் மடக்கி நடத்துனரை தாக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![Crime: திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தை வழி மடக்கி நடத்துனரை நையப்புடைத்த மர்ம நபர்கள் Tiruvannamalai: Crime Police have laid a net on the mysterious person who overturned the government bus and killed the driver Crime: திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தை வழி மடக்கி நடத்துனரை நையப்புடைத்த மர்ம நபர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/10/9fe0de673aef1cbf9d0f77d547acf9081686398010819187_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து சென்னைக்கு செல்கிறது. இந்த அரசு பேருந்தின் நடத்துனர் சண்முகம் வயது ( 43) , பேருந்து ஓட்டுனர் சக்திவேல் வயது (45). இவர்கள் இருவரும் அரசு பேருந்தை செங்கம் பணிமனையில் இருந்து இன்று காலையில் எடுத்துக்கொண்டு செங்கத்திலிருந்து புதுப்பாளையம், காஞ்சி வழியாக திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். சென்னை செல்லக்கூடிய பேருந்து திருவண்ணாமலை அடுத்த கலர் கொட்டாய் என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் பேருந்தினை நிறுத்த கோரியுள்ளனர். ஆனால் பேருந்தை அங்கு நிறுத்தவில்லை.
இதனால், இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்தை வழிமறித்த மர்ம நபர்கள் பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை அங்கு நிறுத்தாமல் வந்துக்கொண்டு இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அரசு பேருந்து ஆடையூர் அருகே வந்த போது மூன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்களுடன் இருச்சக்கர வாகனத்தில் மீண்டும் அரசு பேருந்தை வழியில் மடக்கி பேருந்து உள்ளே சென்று நடத்துனர் சண்முகத்திடம் தகறாரில் ஈடுபட்டனர். திடீரென நடத்துனர் சண்முகத்தின் மீது சரமாரியாக தாக்க தொடங்கினார். உடனடியாக ஓட்டுநர் சக்திவேலை தாக்க மர்ம நபர்கள் முயன்ற போது பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூச்சலிட்டதால் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அட்டகாசத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கீழே குதித்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மூன்று நபர்களும் மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் அலறி அடித்தனர். உடனடியாக அரசு பேருந்து நடத்துனர் கிரிவலப் பாதையில் உள்ள தாலுகா காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி தன்னை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து சண்முகம் புகார் அளித்தார். இந்த புகாரினை பெற்றுக் கொண்ட திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரசு பேருந்து நடத்துனர் வழிமடக்கி தாக்கியது ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் வயது (19) எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் தனுஷின் மீது அரசு பணியாளரை பணி செய்யாமல் தடுத்தல், அரசு பேருந்தை வழிமடக்கி தகாத வார்த்தையில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தனுசை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசு பேருந்து நடத்துனர் பேருந்து நிறுத்தி தாக்கிய சம்பவம் திருவண்ணாமலை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)