மேலும் அறிய
Advertisement
மர்ம பொருள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம்... பீதியில் மக்கள்... விரைந்த கலெக்டர்
இந்த பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வையுங்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் அருகே மர்ம விழுந்து ஐந்து அடி அளவிலான பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது.
இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திரும்பவும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களிடம் கூறுகையில், அந்த பள்ளத்தின் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று குவிந்தனர்.
மேலும் இந்த மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதி அடைந்தனர்.
இந்தச் சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இந்த பள்ளத்தை முதலில் பார்த்தவர் யார்? யாருக்கு சொந்தமான இடம் எனவும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கு முனியப்பனிடம் இந்த பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் மாவட்ட அறிவியல் மைய அலுவலர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொள்வார்கள்.
மேலும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறிச் சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion