மேலும் அறிய
Advertisement
“எந்த ஒரு பணிக்கு லஞ்சம் பெற மாட்டோம்” - பெயர் பலகை வைத்து ஊராட்சி செயலக கட்டிடம் திறப்பு
நத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பம்ப்செட் ஆபரேட்டர்கள், புகைப்படங்களையும் ஊராட்சி செயலக கட்டிடத்தின் உள் பகுதியில் வைத்துள்ள ஊராட்சி மன்ற தலைவர் இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது.
எந்த ஒரு பணிக்கு லஞ்சம் பெற மாட்டோம் என பெயர் பலகை வைத்தும் தூய்மை பணியாளர்களின் புகைப்படம் வைத்தும் நத்தம் ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டிடத்தை திறந்து வைத்த கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் ஊராட்சிக்கு ஊராட்சி செயலகம் கட்டிடம் சுமார் 40 லட்சம் மதீப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் இதனை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் இந்த ஊராட்சி செயலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எந்த ஒரு பணிக்காகவும் லஞ்சம் பெற மாட்டோம் என பெயர் பலகை வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சேர்மன் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் உட்பட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் புகைப்படமும் இருந்தது.
இதனை தொடர்ந்து நத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பம்ப்செட் ஆபரேட்டர்கள், புகைப்படங்களையும் ஊராட்சி செயலக கட்டிடத்தின் உள் பகுதியில் வைத்துள்ள ஊராட்சி மன்ற தலைவர் இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது.
மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இது போல் வைக்கப்பட்டது நத்தம் ஊராட்சியில் தான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் ஊராட்சியில் அனைத்து விதமான வசதிகளுடன் புதியதாக ஊராட்சி செயலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது பல்வேறு கட்டமைப்புடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பெண் கல்வி என்பது மிக முக்கியமானது. பெண் குழந்தைகளை படிக்க வைப்பதால் நாடு வளர்ச்சி அடையும் என்றார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் பானு, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion