Local Body Election 2022 | திமுக வேட்பாளராக களம் இறங்கும் 2K Kid - ஆரணியை தனி மாவட்டமாக்க பாடுபடுவதாக உறுதி
ஆரணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் 20-வது வார்டில், 2k kid 21 வயது நிரம்பிய ரேவதி தற்போது திமுக சார்பில் களம் இறங்கியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை, 4 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளைக் கொண்டது. இவற்றில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 144 வாக்கு சாவடிகளும் ஆண், பெண் வாக்காளர்கள் 142135 நபர்கள் உள்ளனர். அதேபோன்று ஆரணி நகராட்சியில்- 33 வார்டுகள் உள்ளன, இதில் 65 வாக்குசாவடிகள் மற்றும் ஆண், பெண், மற்றும் மூன்றாம் பாலினம் சேர்ந்த வாக்காளர்கள் 54881 உள்ளனர். ஆகியவற்றைக்கும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் - திமுகவை தோற்கடிக்க குடும்பத்துடன் களமிறங்கும் திமுக முன்னாள் கவுன்சிலர்
இதனை அடுத்து, அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட சுந்தரம் குடியிருப்பு பகுதி 20-வது வார்டில், அரசு என்பவரின் இருபத்தி ஒன்னு வயது மகள் ரேவதி தற்போது திமுக கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார். ரேவதி, சென்னையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இளம் வயது வேட்பாளர் என்பதால் சுந்தரம் குடியிருப்பு 20-வார்டில் இவர் தற்பொழுது பேசும் பொருளாய் வலம் வந்துள்ளார். மேலும் இவர் 2 k கிட்ஸ் என்பதால் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளார். இவருடைய தந்தை அரசு முன்னாள் திமுக கவுன்சிலர். இவர் தன்னுடைய தந்தையுடன் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Urban Local Body Election | தனிநபர் அவதூறு பரப்புரைகளுக்கு போஸ்டர் அடிப்பதில்லை - அச்சக உரிமையாளர்கள் முடிவு
உள்ளாட்சித் தேர்தல் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Urban Local Body Election: சேலத்தில் திருங்கை முதல் கல்லூரி மாணவி வரை வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்தனர்
வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வேட்பாளர் ரேவதி தெரிவிக்கையில்; நான் சென்னையில் தனியார் கல்லூரியில் எம்.ஏ படித்து வருகின்றேன். திமுக சார்பில் எனக்கு நகர மன்ற தேர்தலில் 20- வது வார்டு கவுன்சிலருக்கு நிற்பற்கு வாய்ப்பு வழங்கிய முதல்வருக்கு நன்றி நன்றி தெரிவித்து கொள்வதாகவும். நான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் திருவண்ணாமலை மாவட்டத்தை 2ஆக பிரித்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக ஆரணி நகர மன்றத்தில் கோரிக்கை வைத்து தீர்மானம் கொண்டு வருவேன். மேலும் எனது வார்டில் உள்ள பொது மக்களின் கோரிகைகளை அறிந்து தீர்வு செய்வேன் என்றும் இளம் வேட்பாளர் ரேவதி உறுதியளித்தார். விரைவில், வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தது அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | கரூரில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கும் 24 வயது மாணவி