(Source: ECI/ABP News/ABP Majha)
மாணவர்களுக்கு தரமான முறையில் உணவுகள் வழங்கப்படுகிறதா..? - கேட்டறிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு தரமான முறையில் தினந்தோறும் உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிய வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், அரசு முதன்மை செயலாளர் வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூடுதல் ஆட்சியர் ரிஷப் உடன் இருந்தனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தெரிவித்தாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பல்வேறு துறைகளின் மூலம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல் வேளாண்மைத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தும், வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் குறித்தும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும், அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இ-சேவை மையத்தின் மூலம் 20 வகையான சான்றிதழ் குறித்தும், பள்ளி கல்வி துறை மூலம் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பிற்படுத்தபட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மிதி வண்டிகள் குறித்தும், வீடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறப்பு செயலாக திட்டத்தின் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டத்தினையும், தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தரமான முறையில் தினந்தோறும் உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிய வேண்டும். இதனை ஆய்வு செய்யவேண்டும், புதுமை பெண் திட்டத்தை பற்றியும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்தும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் குறித்தும், அரசு முதன்மை செயலாளர் வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரஜ்குமார் விரிவாக ஆய்வு மேற்கொண்டு மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டு என அறிவுறுத்தினார்.