மேலும் அறிய

வடகிழக்கு பருவமமை எதிரொலி - திருவண்ணாமலையில் 32 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது...!

’’ஆரணி பெரிய ஏரி நிரம்பியதால் மேளதாளத்துடன் ஊர்வலமாக தாலி பட்டு புடவை மற்றும் சீர்வரிசை செலுத்தி உபரி நீர் திறப்பு’’

தமிழகத்திற்கு அதிகளவு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 93 ஏரிகள் உள்ளன. அதில் 32 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 10 ஏரிகள் 70% முதல் 100% கொள்ளளவையும் 32 ஏரிகள் 50% முதல் 75% கொள்ளவையும், 14 ஏரிகள் 25% முதக் 50% கொள்ளளவையும், 37 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான கொள்ளளவிலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள  வேங்கிகால் ஏரி முழுவதுமாக நிரம்பி நாச்சிப்பட்டு வழியாக நீரை வெளியேற்றி வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணையின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஏற்கனவே திருவண்ணாமலை பெரிய ஏரி நிரம்பிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் பெரிய ஏரியான ஆரணி பெரிய ஏரி மற்றும் வேங்கிக்கால் ஆகிய ஏரிகள்  கோடி மூலமாக  நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமமை எதிரொலி - திருவண்ணாமலையில் 32 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது...!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள சேவூர் காமக்கூர் கண்ணமங்கலம் குன்னத்துர் கொளத்தூர் அடையபலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 62 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் செண்பக்தோப்பு அணையில் உபரி நீரை வெளியேற்றி வருவதால் கமண்டலநாகநதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு இதனால் சுற்றியுள்ள கிராமங்களான கொளத்துர் கண்ணமங்கலம் குன்னத்துர் சேவூர் உள்ளிட்ட கிராமங்களில் உபரி நீர்வரத்து அதிகளவு செல்கின்றன. மேலும் ஆரணி அருகே உள்ள சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம் பெரிய ஏரி நீர்வரத்து அதிகளவில் ஏற்பட்டு பிறகு ஏரி நிரம்பியதாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பெண்களுக்கு திருமணம் செய்கின்ற போது தாலி பட்டுபுடவை வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்குவது வழக்கம்

வடகிழக்கு பருவமமை எதிரொலி - திருவண்ணாமலையில் 32 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது...!

ரகுநாதபுரம் ஏரி நிரம்பியதால் சேவூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளாதரணி ஓன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சீர்வரிசை சுமந்த சென்று சேவூர் பெரிய ஏரியில் தாலி பட்டுபுடவை உள்ளிட்டவைகளை செலுத்தி உபரி நீரை மலர் தூவி பூஜைகள் செய்து திறந்து வைத்தனர். அப்போது அருகில் இருந்த பெண்ணுக்கு சாமி வந்து ஆடியதால் பொதுமக்கள் பரவசமடைந்தனர். இந்த பெரிய ஏரியில் நீரை திறந்துள்ளதால் இதிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
Embed widget