மேலும் அறிய

அரக்கோணம் நகரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - போலிசாருடன் வாக்குவாதம்...!

’’பாரத் மாத்தா கி ஜே என கோஷங்களை எழுப்பி 3 ஆடி உயர விநாயகர் சிலையை இருசக்கர வாகனத்தில் வைத்து வடமாம்பாக்கம் ஏரியில் கரைப்பதற்காக  எடுத்துச் சென்றனர்’’

கேரளா உள்ளிட்ட தமிழ் நாட்டின் அண்டை மாநிலங்களில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துவருவதை ஒட்டி  சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வழிபாட்டிற்கு வைப்பதற்கும் அதனை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் தமிழ் நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி,  இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட பல இந்து அமைப்பினர் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு இந்து மதத்திற்கும் இந்து மத நம்பிக்கையாளர்களுக்கும் எதிரான அறிவிப்பு என்று விமர்சித்து தடைகளை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அரக்கோணம் நகரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - போலிசாருடன் வாக்குவாதம்...!
 
இந்து அமைப்பினரின் இந்த அறிவிப்பு  கொரோனா  தொற்று பரவலுக்கு வழிவகுக்காமல் இருக்கவும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பதற்காகவும்   ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே ,  இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தடையை மீறி விநாயகர் சிலை ஒன்றை நிறுவினார்.
 
அரக்கோணம் நகரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - போலிசாருடன் வாக்குவாதம்...!
 
இது தொடர்பாக அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் . அப்போது அங்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றும்படி உடன் வந்திருந்த  காவலர்களுக்கு ஆய்வாளர் சீனிவாசன் உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த இந்து அமைப்பினருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அரக்கோணம் நகரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - போலிசாருடன் வாக்குவாதம்...!
 
சிலையை காவல்துறை அகற்றுவதற்கு  நாங்கள் அனுமதிக்க  மாட்டோம் என்றும் , மாறாக இங்கு வைக்கப்பட்ட விநாயகர்  சிலையை நாங்களே எடுத்துச் சென்று வடமாம்பாக்கம் ஏரியில் கரைப்பதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30  நிமிடத்திற்கும் மேல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்  காவல்துறை உடனடியாக பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை  இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களே அகற்றுவதற்கு அனுமதி கொடுத்ததால், அங்கு கூடியிருந்த இந்து மத அமைப்பை சேர்ந்தவர்கள் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சூடம் காண்பித்து, தேங்காய் உடைத்து 'பாரத் மாத்தா கி ஜே' என கோஷங்களை எழுப்பி 3 ஆடி உயர விநாயகர் சிலையை இருசக்கர வாகனத்தில் வைத்து வடமாம்பாக்கம் ஏரியில் கரைப்பதற்காக  எடுத்துச் சென்றனர்.
 
அரக்கோணம் நகரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - போலிசாருடன் வாக்குவாதம்...!
 
தடை மீறி பொது இடத்தில விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் நகரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Embed widget